இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

IPL Playoff predicts: ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் இந்த  அணிகள் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என முன்னாள் இந்திய வீரர் இஃப்ரான் பதான் கணித்து உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 29, 2025, 07:02 PM IST
  • ஐபிஎல் தொடர் கடந்த 22 தொடங்கியது
  • இந்நிலையில், பிளே ஆஃப் செல்லும் அணிகள் குறித்து இர்பான் பதான் கணித்துள்ளார்
இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன. 

Add Zee News as a Preferred Source

கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், மொத்தமாக அணிகளின் வீரர்கள் மாறி உள்ளனர். கேப்டனாக இருந்தவர்களே வேறு அணிகளுக்கு மாறி உள்ளதால், ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அனைத்து அணிகளும் தங்களது முதல் சுற்று போட்டியை முடித்துள்ள நிலையில் இரண்டாம் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. 

மேலும் படிங்க: கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் 35 ரொமாண்டிக் ஹீரோ! யார் தெரியுமா?

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்த அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. இரண்டாவது இடத்தில் லக்னோ அணியும் மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணியும், நான்காவது இடத்தில் டெல்லி அணியும் உள்ளன. 

அதேபோல் மீதமுள்ள 6 இடங்களில் முறையே ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் உள்ளன. இதில், பெங்களூரு, சென்னை, லக்னோ, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே தற்போது வரை இரண்டு போட்டிகள் விளையாடி உள்ளன. இச்சூழலில் இன்று தங்களது இரண்டாவது லீக் சுற்றில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. 

இர்பான் பதான் கணிப்பு 

இந்த நிலையில், இந்த தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ள 4 அணிகள் குறித்து கணித்து உள்ளார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என இர்பான் பதான் கணித்துள்ளார். 

எந்தெந்த அணிகள் கோப்பை வென்றுள்ளது

இதுவரை நடந்துள்ள 17 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தலா 5 முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.  

மேலும் படிங்க: கமல் பெயரில் மோசடி? ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News