பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - இன்சமாம் உல் ஹக்

உலகின் அனைத்து கிரிக்கெட் அமைப்புகளும் சேர்ந்து பிசிசிஐயை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஐபிஎல் போட்டிகளை உலகம் முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.  

Written by - R Balaji | Last Updated : Mar 2, 2025, 02:56 PM IST
  • பிசிசிஐ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
  • ஐபிஎல் தொடரில் மற்ற நாட்டு வீரர்கள் விளையாட கூடாது
  • முன்னாள் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் பேச்சு
பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - இன்சமாம் உல் ஹக்

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பிப்.19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிக்கு கொண்டு வர வேண்டும் 

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரை இறுதியை நெருங்கி உள்ளது. இந்திய அணியும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், அரை இறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறினாலும் இறுதி போட்டியும் துபாயிலேயே நடைபெறும். 

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் பிசிசிஐ தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் தொடரை தவிர்த்து வேறு எந்த பிரீமியர் லீக் தொடரிலும் விளையாட அனுமதி இல்லை. அதையும் மீறி ஓர் இந்திய வீரர் மற்ற தொடர்களில் விளையாடினால், அதன் பின் ஐபிஎல் மற்றும் இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் அந்த வீரர்கள் விளையாட முடியாது என்ற விதி உள்ளது. 

மேலும் படிங்க: ரோகித் சர்மாவின் பிரம்மாஸ்திரம்! இவர் சிறப்பாக ஆடினால் இந்தியா வெற்றி

அதே நேரத்தில் மற்ற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இன்சமாம் உல் ஹக் பேசி உள்ளார்.

ஐபிஎல் தொடரில் மற்ற நாட்டு வீரர்கள் பங்கேற்க கூடாது 

இது குறித்து ஓர் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, "சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனியாக துபாயில் ஆடுவதை கூட விட்டு விடுங்கள். உலகின் மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மற்ற நாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை. 

எனவே மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். இந்திய நாட்டு வீரர்களை மற்ற நாட்டு டி20 தொடர்களில் விளையாட அனுமதிக்காத நிலையில், நீங்களும் உங்கள் வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்காதீர்கள். 

2009ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. எந்த அணியும் பாகிஸ்தான் வீரர்களை வாங்காது. இது எழுதப்படாத விதி. எனவே தான் பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் தங்களது பெயர்களை கொடுப்பதில்லை" என தெரிவித்துள்ளார்.  

மேலும் படிங்க: அசைக்க முடியாத ஆல்ரவுண்டர்; அஸ்மதுல்லா ஓமர்சாய் எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News