2027 உலகக் கோப்பையில் கோலி, ரோகித்துக்கு வாய்ப்பு இருக்கா? கம்பீர் சூசக பதில்!

Gautam Gambhir on Virat Kohli & Rohit Sharma presence in 2027 World Cup: 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் இருப்பு குறித்து தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் சூசகமாக பதிலளித்துள்ளார்.

Written by - R Balaji | Last Updated : Oct 14, 2025, 08:13 PM IST
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோகித்துக்கு வாய்ப்பு இருக்கா? கம்பீர் சூசக பதில்!

Gautam Gambhir on Virat Kohli & Rohit Sharma presence in 2027 World Cup: இந்திய கிரிக்கெட் அணி இன்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முடித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேகொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் விளையாட இருக்கிறது. இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அப்பதவில் இருந்து நீக்கப்பட்டு இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source

ஏற்கனவே மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையின்போது, வயது 40 நெருங்கிவிடும் என்பதால், அவர்கள் அத்தொடரில் விளையாடுவார்களா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. தற்போது ரோகித் சர்மாவின் ஒருநாள் பதவியை பறித்த பின்னர், அவர்களின் இருப்பு மேலும் கேள்விக்குறியாகி உள்ளது. இருப்பினும் முன்னாள் வீரர்கள் பலரும் உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்பிரிக்கா போன்ற மண்ணில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் அங்கு எதுவும் சாதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், 2027 உலகக் கோப்பை தொடர் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் கம்பீர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இருப்பு குறித்து சூசகமாக பதில் அளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. எனவே நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பது முக்கியம் என கூறினார். 

இதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் குறித்து பேசிய கம்பீர், அவர்கள் தரமான வீரர்கள்.தற்போதைய சூழலின்படி அவர்களுக்கு ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகரமாக அமையட்டும் என தெரிவித்தார். 

முன்னதாக பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பின்னர் விராட் கோலி, ரோகித் சர்மாவை தேர்வுக்குழு கழற்றிவிட திட்டமிட்டதாக தகவல் வெளியான. ஆனால் அந்த செய்திகளுக்கு பின்னர் இருவரும் தாம்மாகவே முன் வந்து டெஸ்ட் ஓய்வை அறிவித்தனர். அதேபோல் தற்போதும் ஆஸ்திரேலியா தொடருக்கு பின்னர் இருவரையும் தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கழட்டிவிட திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: நீங்கள் என்னை விமர்சியுங்கள்.. ஆனால் ஹர்ஷித் ராணாவை.. ஸ்ரீகாந்த்துக்கு கம்பீர் பதிலடி!

மேலும் படிக்க: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: இரண்டு முக்கிய வீரர்கள் விலகல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News