IPL 2026, Royal Challengers Bangalore: ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதற்கு முன், ஐபிஎல் 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று அபுதாபி நகரில் நடைபெற இருக்கின்றன. அதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்கவைத்து, மிச்ச வீரர்களை மினி ஏலத்திற்கு விடுவித்திருக்கின்றன.
IPL 2026: சென்னையில் போட்டி நடைபெறுவதில் சிக்கல்
ஐபிஎல் 2026 சீசனுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சிஎஸ்கே அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் ஒரு சீசனை விளையாட இருக்கிறார். இது அவருக்கு கடைசி சீசனாக அமைய 99% வாய்ப்புள்ளது. தோனி, ரோஹித், கோலி ஆகியோர் மீண்டும் ஒன்றாக விளையாடும் சீசன் என்பதாலும் எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த இடங்களில் நடைபெறும் என்ற கேள்விகளும் உள்ளது. 2026ஆம் ஆண்டில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றன, இதனால் தொடரின் பிற்பகுதியில் கொல்கத்தா மற்றும் சென்னையில் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
IPL 2026: ராஜஸ்தான் அணியின் மைதானம் மாற்றம்
அதே வேளையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதன் ஹோம் மைதானத்தை மாற்றுகிறது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இனி ராஜஸ்தான் போட்டிகள் நடைபெறாது, அதற்கு பதில் புனேவில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது.
Royal Challengers Bangalore: சின்னசாமியில் போட்டிகள் நடக்குமா?
இதேபோல், கடந்தாண்டு ஜூன் மாதம் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த கூட்டநெரிசல் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கூட்டநெரிசல் சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு கடும் பிரச்னை எழுந்தது. மேலும், சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்பட்டது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரும் ஆரம்பக் கட்டத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்திலேயே திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதிநேரத்தில் அங்கிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி என்பதால் ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற வேண்டிய நிலையில், 2026 சீசனில் ஒரு போட்டிக்கூட அங்கு நடைபெறாது என தகவல்கள் வெளிவந்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின.
Royal Challengers Bangalore: சின்னசாமியில் போட்டிகள் நடக்கும்
இந்நிலையில், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தலில் வாக்களித்த பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தை விட்டு போகாது என்றும் கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகள் பெங்களூருவில் நடைபெறும் என்றார். இது கர்நாடகா மற்றும் பெங்களூரு மாநிலத்திற்கு மரியாதை அளிக்கும் விஷயம். அடுத்த ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெறுவதை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
Royal Challengers Bangalore: ஆர்சிபி ரசிகர்களுக்கு நல்ல செய்தி
இங்கு நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் ரத்தானது குறித்த கேள்விக்கு, "இனி வருங்காலங்களில் என்னென்ன போட்டிகள் இருக்கின்றனவோ, அதற்கு அனுமதி அளிப்போம்" என்றார். வரும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டிகள் கூட பெங்களூருவில் திட்டமிடப்படவில்லை. மேலும் கிரிக்கெட் சங்க தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்விக்கு, "நான் KSCA உறுப்பினர். நான் சிறுவனாக இருந்தபோது, நாகராஜ் எனக்கு உறுப்பினர் பொறுப்பை கொடுத்தார். அவரது மகன் எனது வகுப்புத் தோழர். பிரிஜேஷ் படேல் முதல் அனில் கும்ப்ளே, பிரசன்னா உள்ளிட்ட பலரை நான் அறிவேன். நான் விரும்பியவர்களுக்கு வாக்களித்தேன்" என்றார்.
மேலும் அவர், "நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். சமீபத்திய கூட்டநெரிசல் சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம், மேலும் மைதானத்தின் கண்ணியம் நிலைத்திருப்பதை உறுதி செய்வோம். சட்ட ரீதியாக பார்வையாளர்களை நிர்வகிப்பதன் மூலம் மைதானம் மேம்படுத்தப்படும். கூடுதலாக, மாற்றாக ஒரு பெரிய மைதானத்தை கட்டுவோம்" என்றார்.
மேலும் படிக்க | CSK அணி இந்த 5 Uncapped வீரர்களை டார்கெட் செய்யும்... யார் யார் தெரியுமா?
மேலும் படிக்க | திருமணம் ரத்து... ஸ்மிருதி மந்தனா வெளிப்படையாக அறிவிப்பு - அடுத்த பிளான் என்ன?
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸின் மாஸ்டர் பிளான்! டார்கெட் செய்யும் 5 முக்கிய வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









