RCB IPL 2025 champion : ஐபிஎல் 2025 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடங்கியது முதல், முதல் சாம்பியன் பட்டத்துக்காக காத்திருந்த ஆர்சிபி அணி 18வது ஆண்டில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 18 ஆண்டுகளாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லாமல் இருந்த விராட் கோலிக்கும் இதுவே முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் ஆகும். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக பெங்களுரு நகரத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்சிபி அணியை கொண்டாடி வருகின்றனர். மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு வரும் ஆர்சிபி அணியை வரவேற்க ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
பெங்களுரு வந்ததும் ஐபிஎல் சாம்பியன் கோப்பையுடன் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரை சந்திக்கும் ஆர்சிபி அணியினர் வாகன பேரணியிலும் நடத்துகிறது. விமானம் நிலையம் முதல் பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியம் வரை ஐபிஎல் சாம்பியன் கோப்பையுடன் ஆர்சிபி அணி வாகன பேரணியில் பங்கேற்கிறது. 4 மணிக்கு முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்கின்றனர். மாலை 6 மணிக்கு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடக்கிறது.
ஆனால், வாகன பேரணியை முடிவதை பொறுத்தே சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடக்கும். ஆனால், ஆர்சிபி அணிக்கு மிகப்பிரம்மாண்ட வரவேற்பு காத்திருக்கிறது. ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநில அரசு இணைந்து ஆர்சிபி அணியினரை மிகப் பிரம்மாண்டமாக வரவேற்க உள்ளனர். வழிநெடுகிலும் மலர்களை தூவியும், மேள தாளங்கள் முழங்கவும் இந்த வெற்றிப் பேரணி நடக்க உள்ளது.
ஐபிஎல் தொடங்கியது முதல் முதல் சாம்பியன் பட்டத்துக்காக காத்திருந்த ரசிகர்கள் இத்தனை நாள் காத்திருப்பை இன்று கொண்டாடி தீர்க்க ஆயத்தமாகி வருகின்றனர். ஆர்சிபி நிர்வாகமும் பிளேயர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆர்சிபி அணிக்கு இன்றைய நாள் மிகப்பெரிய சர்பிரைஸ்கள் காத்திருக்கிறது. நேற்றிரவு முழுவதும் அகமதாபாத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆர்சிபி பிளேயர்கள், மதியம் பெங்களுரு திரும்பி, ஐபிஎல் சாம்பியன் கொண்டாட்டத்தை பெங்களூருவில் கொண்டாட உள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடருக்கான இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்துக்கான காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.
மேலும் படிக்க | நேரம் வந்துவிட்டது.. கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி சொன்ன முக்கிய தகவல்!
மேலும் படிக்க | இன்றுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









