18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) தொடரின் 19வது போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கிய நிலையில், ஹெட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா 18, இஷான் கிஷன் 17 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதீஷ் ரெட்டி மற்றும் ஹென்ரிச் கிளசென் சிறிது நேரம் களத்தில் நின்று அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் இந்த பார்ட்னர்ஷிப்பும் உடைந்தது. கிளசென் 27 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து நிதீஷ் ரெட்டியும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடினார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பாக சிராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பிரஷித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. கடந்த போட்டிகளில் நல்ல ரன்களை சேர்த்த சாய் சுதர்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆனார். ஆனால் சுப்மன் கில் - வாஷிங்டன் சுந்தர் கூட்டணி குஜராத் அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது. இருவரும் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். சும்பன் கில் அரைசதம் விளாசினார். வாஷிங்டன் சுந்தரும் அரைசதத்தை அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து ரதர்ஃபோர்ட் - சுப்மன் கில்லுடன் கைக்கோர்த்து அணியை வெற்றி பெற செய்தனர். இறுதி வரை சுப்மன் கில் களத்தில் இருந்தார். கில் 61 ரன்களும், ரதர்ஃபோர்ட் 35 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
மேலும் படிங்க: சிஎஸ்கே போட்டிக்கு பின்... டெல்லியிடம் இருந்து கழண்டுகொண்ட பீட்டர்சன் - என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









