இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

43 வயதிலும் ஏன் தோனி ஐபிஎல் விளையாடுகிறார் என்பதை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விளக்குகிறார். 

Written by - R Balaji | Last Updated : Mar 19, 2025, 09:35 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி
  • இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு கடைசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • தோனியின் ஏன் இந்த வயதிலும் ஐபிஎல் விளையாடுகிறார் என ஹர்பஜன் விளக்கம்
இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருடன் பல முன்னணி வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி. 

Add Zee News as a Preferred Source

இன்று வரை சென்னை ரசிகர்கள் சிலர் ஐபிஎல்லை விரும்புவது தோனிக்காகதான். ஐபிஎல்லில் தோனியின் பார்ப்பதற்காகவே பலர் மைதானத்திற்கு வருகிறார்கள். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் தோனி தொடர்ந்து ஐபிஎல் விளையாடி வருகிறார். 

அதேபோல் தோனிக்கு இந்த சீசன் தான் கடைசியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.  43 வயதான தோனி ஏன் ஐபிஎல் போல ஒரு பெரிய தொடரில் விளையாட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த கேள்வியை தோனியிடமே கேட்டதாகவும் அதற்கு அவர் பதில் அளித்ததாக்வும் கூறி இருக்கிறார். 

மேலும் படிங்க: ஐபிஎல் 2025: IPL Ball Boy to பஞ்சாப் கேப்டன்.. ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தோனியை சந்தித்தேன். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். நான் அவரிடம் கேட்டேன், உனக்கு இது கடினமாக இல்லையா? என்று, அதற்கு 'நிச்சயமாக எனக்கு இது கடினமாக இருக்கிறது. ஆனால் இதை நான் பிடித்துதான் செய்கிறேன். மாலை நேரம் ஆனால் உடனே பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட சென்று விடுகிறேன். வாழ்நாள் முழுக்க இதைதான் செய்து வருகிறேன். உங்களுக்கு விளையாட வேண்டும் என தோன்றும் வரை உங்களால் இதை செய்ய முடியும் என பதில் அளித்தார் என ஹர்பஜன் கூறினார்.   

தொடர்ந்து பேசிய ஹர்பஜன், எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் கலந்து கொள்ளாமல் திடீரென ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில் விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என தோனி மற்றவர்களுக்கு காட்டுகிறார். ஐபிஎல் விளையாடினால் போதும் என சாதாரனமாக அவர் விளையாடவில்லை. பந்து வீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்திகிறார். கடின பயிற்சிகளை மேற்கொள்கிறார். தொடர் தொடங்குவதற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பாகவே அவர் இதை செய்கிறார் என தெரிவித்தார். 

மேலும் படிங்க: CSK vs MI: அதிக போட்டிகளை வென்று‌ ஆதிக்கம் செலுத்திய அணி‌ எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News