ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்லின் 18 வருட வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது. இதனை கொண்டாட நினைத்து ஏற்பாடு செய்யப்பட நிகழ்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விஷயம் தற்போது பூதாகரமாகி உள்ளது. காவல்துறையை மீறி பேரணி அறிவிப்பை வெளியிட்ட ஆர்சிபி நிர்வாகத்தின் மீது நேற்று (ஜூன் 05) விசாரணை நடத்தப்பட்டது.
இச்சூழலில் இன்று (ஜூன் 06) ஆர்சிபி வெற்றி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். கர்நாடக போலீசார் அனுமதி மறுத்தும் இந்த நிகழ்ச்சியை நடத்தியதே அசம்பாவிதத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை போலவே கடந்த ஆண்டும் ஒரு அசம்பாவிதம் அரங்கேறியது.
அதாவது கடந்த ஆண்டு அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அப்போது ஹைதராபாத்தில் தகவல் ஏதும் தெரிவிக்காமல் திடீரென அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வந்ததால், ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், இதற்கு அல்லு அர்ஜூன் தான் காரணம் என கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் விராட் கோலியை ரசிகர்கள் பார்க்க வந்ததால் தான் இப்படியான அசம்பாவிதம் அரங்கேறியது. எனவே இந்த விவகாரத்தில் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதோடு arrestkohli என்ற ஹேஷ் டேக்கும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதிக கூட்டம் கூடியதை கருத்தி கொண்டு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் வீரர்கள் அதைபற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுதான் 11 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், விராட் கோலி உள்ளிட்ட ரசிகர்கள் கைது செய்ய வேண்டும். அல்லு அர்ஜூனுக்கு ஒரு நியாயம் விராட் கோலிக்கு ஒரு நியாயமா என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிங்க: அவர் இல்லை என்றால் எதுவும் இல்லை.. ரோகித் சர்மா உருக்கம்!
மேலும் படிங்க: RCB-ஐ சேர்ந்த 4 பேர் கைது... யார் நிகில் சோசலே...? இவர் கைது செய்யப்பட்டது ஏன்...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









