Chaos In Kolkata Lionel Messi Event: இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள, கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக அறியப்படும் அர்ஜென்டினா வீரர் லியானல் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். முதலில், இன்று மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்திறங்கினார்.
Kolkata Lionel Messi Event: மைதானத்தில் களேபரம்
இன்று கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் லியானல் மெஸ்ஸியின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முறையாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை என்றும், மக்கள் கூட்டத்தை அதிகாரிகள் முறையாக கையாளில்லை என்றும் மெஸ்ஸியை காண வந்த ரசிகர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர். பார்வையாளர்கள் மைதானத்தில் இருந்த சேர்களை தூக்கி வீசுவது, பாட்டில்களை தூக்கி வீசுவது, கூடாரங்களை கிழித்தெறிவது, மெஸ்ஸியின் போஸ்டர்களை கிழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தங்களின் கோபத்தை வெளிக்காட்டினர். மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் கூட அக்கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.
#WATCH | Kolkata, West Bengal: Angry fans vandalised the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event#GOATIndiaTour2025 #LionelMessi https://t.co/I0iqMUJsiQ pic.twitter.com/tG8GHIqubs
— ANI (@ANI) December 13, 2025
Kolkata Lionel Messi Event: ரசிகர்களுக்கு ஏமாற்றம்
மெஸ்ஸியை பார்க்க வேண்டும் என்பதற்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி, நீண்ட தொலைவில் இருந்து வந்த பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியே ஏற்பட்டிருக்கிறது. பார்வையாளர்களால் மெஸ்ஸியை பார்க்கக் கூட முடியவில்லையாம். தமிழ்நாட்டில் இருந்து ரயில் பிடித்து மெஸ்ஸியை பார்க்கச் சென்றவர்களுக்கு அங்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. இதனால் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக ரசிகர்கள் கோபமடைந்திருக்கிறார்கள்.
#WATCH | Kolkata, West Bengal: Angry fans resort to vandalism at the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event.
Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.
A fan of star footballer Lionel Messi said, "Absolutely terrible… pic.twitter.com/TOf2KYeFt9
— ANI (@ANI) December 13, 2025
Kolkata Lionel Messi Event: ரசிகர்கள் வைத்த குற்றச்சாட்டு
மேலும், மைதானத்தில் மெஸ்ஸி குறைவான நேரம் மட்டுமே இருந்தார் என்றும் அப்போது அவரை சுற்றி விஐபிகள், அரசியல்வாதிகள், விழா ஏற்பாட்டாளர்களே இருந்தார்கள் என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மெஸ்ஸி கால்பந்தை உதைக்கவோ அல்லது வேறு எதையுமே செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், அரசு ஆகிய இரண்டையும் பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். மெஸ்ஸியை பொதுமக்களிடம் இருந்து இந்தளவிற்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால், எதற்காக மக்களை அழைத்து விலை உயர்ந்த டிக்கெட்டுகளை விற்கிறீர்கள்? என்றும் அவர்கள் வாதிட்டனர்.
#WATCH | Kolkata, West Bengal: Angry fans vandalised the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event #GOATIndiaTour2025 #LionelMessi pic.twitter.com/Z4KuLfbHDK
— ANI (@ANI) December 13, 2025
Kolkata Lionel Messi Event: மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி
இச்சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி லியானல் மெஸ்ஸியிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர், "சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குறைபாட்டைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் அவர்களுக்குப் பிடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க அங்கு கூடினர். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தேன்.
I am deeply disturbed and shocked by the mismanagement witnessed today at Salt Lake Stadium. I was on my way to the stadium to attend the event along with thousands of sports lovers and fans who had gathered to catch a glimpse of their favourite footballer, Lionel Messi.
I…
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2025
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்களிடமும், அவரது ரசிகர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். மேலும், "ஓய்வுபெற்ற நீதிபதி, ஆஷிம் குமார் ரே தலைமையில் தலைமைச் செயலாளர், உள்துறை மற்றும் மலைவாழ் விவகாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை நான் அமைத்துள்ளேன். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பொறுப்பை நிர்ணயிக்கும், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மெஸ்ஸியுடன் ஒரே ஒரு போட்டோ எடுக்க..இவ்ளோ லட்சம் கட்டணம்! எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









