IPL 2020 MI vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) பிளேஆஃப்களை அடைவதற்கான வாய்ப்புகள் முடிந்துவிட்டன. மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் படத்தை வென்ற CSK அணிக்கு இந்த சீசன் மிகவும் மோசமான ஒன்றாகும். சென்னை ஆடிய 10 போட்டிகளில் 7-ல் தோற்றுள்ளனர். இந்த ஆண்டு தொடர் புள்ளிகள் அட்டவணையின் கீழே எட்டாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் வென்றால், சென்னைக்கு 14 புள்ளிகள் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், மற்ற அணிகளின் செயல்திறனை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு சென்னை செல்வது உறுதிப்படுத்தப்படும். நியூசிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் (Scott Styris), சிஎஸ்கே அணி பிளேஆஃப் சுற்றில் இடம் பெறாது என்று நம்புகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2011 இல் சென்னைக்காக விளையாடிய ஸ்டைரிஸ், "ரன்-ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி சின்ன வாய்ப்பு இருக்கிறது. சி.எஸ்.கே என்பது பிளேஆஃப் பந்தயத்தில் இல்லாத ஒரு அணி என்று நான் வருந்துகிறேன். CSK அணியின் சிறந்த நேரம் முடிந்துவிட்டதாக பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கடைசி போட்டியில் கூறியிருந்தார். நாங்கள் 3 ஆண்டுகளாக இதைப் பற்றி பேசுகிறோம். அணியின் வயது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நன்றாகவே தெரிகிறது அணிக்கு வயதாகிவிட்டது. இதனால் அணியின் செயல்திறன் குறைகிறது.


ALSO READ |  2008 முதல் 2019 வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம்! 2020-ல் எப்படி? ஒரு அலசல்


மேலும் பேசிய ஸ்டைரிஸ், "அவர் இந்த சீசனில் விளையாடியது போல கடந்த ஆண்டும் விளையாடினார் என்று நான் நினைக்கிறேன்." ஆனால் சி.எஸ்.கே அணியின் பல போட்டி வெற்றியாளர்களுக்கு இப்போது வயதாகி விட்டது. அவர்களுடைய திறனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஃபாஃப் டுப்ளெஸிஸ் மற்றும் தீபக் சாஹர் தவிர, அணியில் எந்தவிதமான நிலைத்தன்மையும் இல்லை. இது தவிர, அணியில் பெருசா எதுவும் காணப்படவில்லை. 


"ஸ்டைரிஸுக்கு 2011 சீசனில் 2 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ​​அவர் 1 இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 5 ரன்கள் எடுத்தார்.


ஸ்டைரிஸ் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை அணியை கடுமையாக சாடினார். எம்.எஸ். தோனி (MS Dhoni) தலைமையிலான அணி ஐ.பி.எல் 2020 தொடரில் வெற்றி பெறவேண்டும் என போராடுவதை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறியிருந்தார். 


ALSO READ | ‘அதே நல்ல பேரோட அப்படியே quit செஞ்சிடுங்க தல’: ஏமாற்றத்தின் உச்சத்தில் Twitter-ல் புலம்பும் CSK Fans!!


சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டியின் 41 வது போட்டி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) நடைபெறும். 9 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் மகேந்திர சிங் தோனியின் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR