நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.
இப்போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். அவர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் பேசி முடித்ததும், டேனி மோரிசன், தோனியை அழைத்தார். இந்த நிலையில்தான், எம். எஸ். தோனி ஓய்வு குறித்து பேசி இருக்கிறார்.
தோனி பேச வந்ததும், ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். அதனை கவனித்த டேனி மோரிசன், தோனியிடம், இந்த ஆதரவை பார்த்தால், நீங்கள் அடுத்த ஆண்டு விளையாட வர வேண்டும் போலேயே என கேட்டார். அதற்கு தோனி, நான் அடுத்த போட்டிக்கே வருவேனா என தெரியாது என சிரித்துக்கொண்டே கூறினார்.
தொடர்ந்து பேசிய தோனி, நீங்கள் உங்களின் உள்ளூர் மைதானத்தில் தான் அதிக போட்டிகளை விளையாடுகிறீர்கள். அப்படி இருக்கையில், ஹோம் அட்வாண்டேஜை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் அதை செய்யவில்லை. இப்போட்டியில் எங்கள் பிளேயிங் 11ல் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமாக நாங்கள் பிளேயிங் 11ல் அவ்வளவாக மாற்றங்களை செய்வதில்லை.
ஆனால் இம்முறை அப்படி இல்லை. அதற்கான காரணம் மிக எளிமை ஆனது. எங்கள் அணியின் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக ஆடியிருந்தால் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை தான் மாற்ற வேண்டி இருக்கும். மெகா ஏலத்துக்கு பிறகு நடக்கும் சீசன் என்பதால் இந்த சீசனில் எங்களுக்கு அப்படி நடக்கவில்லை என கூறினார்.
மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியல்!
மேலும் படிங்க: ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு! சாதகமா? பாதகமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









