ICC Award: ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார் MS Dhoni; யாருக்கெல்லாம் விருது கிடைத்தது
ICC Awards 2020: தசாப்தத்தின் சிறந்த உத்வேக கிரிக்கெட் வீரராக தோனி (Mahendra Singh Dhoni) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த விருதுக்கு எம்.எஸ்.தோனி மிகவும் சரியானத் தேர்வு என சமூக வலைத்தளங்களில் ஐ.சி.சி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ICC Awards 2020: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திங்களன்று இந்த ஆண்டுக்கான விருதுகளை (ICC Awards) அறிவித்துள்ளது. அதில் விராட் கோஹ்லி இரண்டு விருதுகளை வென்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல எம்.எஸ்.தோனிக்கு ஐ.சி.சி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது (Spirit of Cricket Award) அளிக்கப்பட்டு உள்ளது.
தசாப்தத்தின் சிறந்த உத்வேக கிரிக்கெட் வீரராக தோனி (Mahendra Singh Dhoni) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த விருதுக்கு எம்.எஸ்.தோனி மிகவும் சரியானத் தேர்வு என சமூக வலைத்தளங்களில் ஐ.சி.சி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஐ.சி.சி ஒருநாள் ஆண்கள் கிரிக்கெட் மற்றும் தசாப்தத்தின் ஐ.சி.சி ஆண் கிரிக்கெட் வீரர் ( Sir Garfield Sobers Award) என்ற விருதை தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு (Virat Kohli) வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கேப்டன் 50 ஓவர் வடிவத்தில் தனது சிறந்த சாதனைக்காக தசாப்தத்தின் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார்.
ALSO READ | ICC Team of the Decade பட்டியலில் முதலிடம் பிடித்த கேப்டன் தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, விராட் கோலி தவிர ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) உள்ளிட்டோர் விருதை வென்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR