நவீன கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைப்பது டி20 கிரிக்கெட் போட்டிகள் தான். இதற்குதான் தற்போது அதிக ரசிகர்கள் உள்ளனர். டி10 போட்டிகளும் அங்காங்கே நடந்து வருகிறது. இந்த வடிவில் தான் சுவாரஸ்யம் அதிகம் இருப்பதால், இதற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில், முதல் 6 ஓவர்கள் பவர் பிளே ஆக இருக்கிறது. இது ஒரு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இந்த ஆறு ஓவர்களில் 30 யார்டுக்கு வெளியே வெறும் இரண்டு வீரர்கள் தான் இருப்பார்கள். இதன் காரணமாக பேட்டிங் அணியால், அதிக பவுண்டரிகளை விளாசி, ரன்களை குவிக்க முடியும். பவர் பிளேவில் ஒரு அணி அதிக ரன்களை குவித்துவிட்டால், அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
மழை பெய்யாத வரை போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படுவதில்லை. ஒருவேளை போட்டியில் மழை குறிக்கிட்டால், ஓவர்கள் குறைக்கப்படுகிறது. ஓவர்கள் குறைக்கப்படும்போது, பவர் பிளே ஓவர்களும் குறைக்கிறது. ஆனால் அது சரியான முறையில் குறைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. உதாரணத்திற்கு மழையால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டால், பவர் பிளே 5 ஓவர்களாக இருக்கிறது. அதுவே போட்டி 5 ஓவர்களாக குறைப்படும்போது, 2 ஓவர்கள் பவர்பிளே இருக்கிறது. இது விளையாடும் அணிகளுக்கு சிக்கலாக உள்ளது என்று குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக பந்து வீசும் அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது என குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில்தான், ஐசிசி ஒரு புதிய விதிமுறையை பவர் பிளேவில் கொண்டு வந்துள்ளது. அதாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்படும்போது, 5 ஓவரில் இருந்து 19 ஓவர்கள் வரை ஆட்டம் குறைக்கப்பட்டால், எத்தனை ஓவர்கள் பவர் பிளே இருக்கும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. அதன்படி,
| போட்டியின் ஓவர்கள் | பவர்பிளே ஓவர்கள் |
| 5 | 1.3 |
| 6 | 1.5 |
| 7 | 2.1 |
| 8 | 2.2 |
| 9 | 2.4 |
| 10 | 3 |
| 11 | 3.2 |
| 12 | 3.4 |
| 13 | 3.5 |
| 14 | 4.1 |
| 15 | 4.3 |
| 16 | 4.5 |
| 17 | 5.1 |
| 18 | 5.2 |
| 19 | 5.4 |
இந்த புதிய விதி வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் படிங்க: 2024 டி20 உலக கோப்பையை வெல்ல இவர்தான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!
மேலும் படிங்க: பும்ராவை மட்டும் நம்ப முடியாது... இந்திய அணியில் 'சிஎஸ்கே' பௌலர் - பக்கா பிளான் ரெடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









