மகளிர் ஒருநாள் உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறுகிறது.. வெளியான அட்டவணை!

Womens World Cup ODI Series: மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jun 16, 2025, 04:40 PM IST
  • 2025 மகளிர் ஒருநாள் உலக கோப்பை
  • அட்டவணை வெளியீடு
மகளிர் ஒருநாள் உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறுகிறது.. வெளியான அட்டவணை!

Womens World Cup Schedule: 2025ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று பிற்பகல் (ஜூன் 16) வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உலக கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த தொடரை இலங்கை மற்றும் இந்தியா நடத்துகிறது. 

இந்தியாவில் பெங்களூரு, விசாகப்பட்டினம், கெளகாத்தி மற்றும் இந்தூர் மைதானங்களில் நடைபெறுகிறது. இங்கையில் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தொடருக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால், இந்த இரு நாடுகள் இனி சேர்ந்து விளையாடுமா, அப்படி விளையாடினால் போட்டி நடப்பது எங்கே உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், மகளிர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் மற்றும் பாகிஸ்தான் விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் என வெளியிட்டுள்ள அட்டவணை மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அரைஇறுதி போட்டிகோ அல்லது இறுதி போட்டிகோ தகுதி பெற்றால், அந்த போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடரின் முதல் போட்டியாக இந்தியா - இலங்கை மோதுகின்றன. இப்போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்தியா மோதும் போட்டிகள்

செப்டம்பர் 30ஆம் தேதி இலங்கையுடன் இந்தியா மோதும் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இதையடுத்து கொழும்பு மைதானத்தில்  பாகிஸ்தானுடன் அக்டோபர் 5ஆம் தேதி மோதுகின்றன. தொடர்ந்து அக்.09 விசாகப்பட்டினத்தில் தென்னப்பிரிக்கா அணியுடனும், 12ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19ஆம் தேதி இந்தூரில் இங்கிலாந்து அணியுடனும், 20ஆம் தேதி கெளகாத்தியில் நியூசிலாந்து அணியுடனும், கடைசி லீக் ஆட்டமாக 26 அக்டோபரில் பெங்களூருவில் வங்கதேசம் அணியுடனும் இந்தியா மோதுகிறது.

மேலும் படிங்க: ஆஸ்திரேலியா தோத்ததற்கு ஐபிஎல் தான் காரணம்! வீரர்களை விளாசிய முன்னாள் பவுலர்!

மேலும் படிங்க: பணத்துக்காக என்னை ஓய்வு பெற சொன்னார்.. கருண் நாயார் ஓபன் டாக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News