ICC T20 2021 உலகக் கோப்பைக்காக இந்தியாவில் 9 இடங்கள் தேர்வு

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவில் 9 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 17, 2021, 09:46 PM IST
  • ICC T20 2021 உலகக் கோப்பை
  • இந்தியாவில் 9 இடங்கள் தேர்வு
  • அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் போட்டிகள் நடைபெறும்
ICC T20 2021 உலகக் கோப்பைக்காக இந்தியாவில் 9 இடங்கள் தேர்வு title=

புதுடெல்லி: ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவில் 9 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  

இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை  இந்தியா நடத்தவிருக்கிறது. அதற்காக ஒன்பது இடங்களை பிசிசிஐ (BCCI) உறுப்பினர்கள் பட்டியலிட்டுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI Apex Council ) ஏழாவது உயர்நிலை கூட்டம் நடைபெற்ற பிறகு இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

டி 20 உலகக் கோப்பைக்கு (T20 tournament) நடத்துவதற்காக ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் மார்க்யூ போட்டிக்கு (marquee event) தயாராக வேண்டும் என்று மாநில கிரிக்கெட் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Also Read | IPL 2021: சென்னை அணியின் அபார வெற்றியில் Deepak Chahar பங்கு

இது தொடர்பான இறுதி அறிக்கை டி 20 போட்டி நெருங்கிய பிறகு தான் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், தர்மசாலா, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் T-20 உலகக் கோப்பைக்கான பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சிலால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"ஒன்பது இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. COVID-19 நிலைமைகளை கண்காணித்து, அதன் அடிப்படையிலேயே போட்டிகளுக்கு ஏற்பாடுகள் தொடர வேண்டும் என்றும், அது போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இறுதி செய்யப்படும்.

கொரோனா வைரஸ் (COVID-19) நிலைமை பல விஷயங்களில் எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்க முடியாமல் உலகை தள்ளாட்டத்தில் வைத்திருக்கிறது.  

Also Read | தோனி சரியான கேப்டன் இல்லை: கவுதம் கம்பீரின்கருத்துக்கு காரணம் என்ன?

டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்களுக்கான விசா போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து பேசிய அதிகாரிகள், இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மற்றும் டி 20 உலகக் கோப்பைக்கான அதன் ஊடகங்களுக்கான விசாக்கள் கொடுப்பதற்கான உத்தரவாதத்தை பிசிசிஐ கொடுக்கிறது.

செப்டம்பர் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு சீசனை COVID-19 இன் இரண்டாவது அலை பாதித்திருக்கிறது.

ALSO READ | IPL 2021: தோனி ஒரு சரியான கேப்டன் இல்லை: கவுதம் கம்பீரின் shocking கருத்துக்கு காரணம் என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News