)
IND A vs SA A, Team India A Squad: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று ஓடிஐ போட்டிகள், 5 டி20ஐ போட்டிகளில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோத உள்ளன.
இந்திய சுற்றுப்பயணம் கடந்த அக். 19இல் தொடங்கிய நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, நாடு திரும்பும் இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுடன் உள்நாட்டில் விளையாட உள்ளன. தற்போது ஆஸ்திரேலியா தொடர் நிறைவடைந்ததும், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட், 3 ஓடிஐ, 5 டி20ஐ நடைபெற இருக்கிறது.
இந்திய அணியை பொருத்தவரை தென்னாப்பிரிக்கா தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற தென்னாப்பிரிக்கா, இந்தியாவிலும் தனது வித்தையை காட்ட களமிறங்கும். ஓடிஐ தொடரை பொருத்தவரை விராட் கோலி, ரோஹித் சர்மா பங்கேற்க இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. வரும் பிப்ரவரியில் இந்தியாவில் டி20ஐ உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், இரு அணிகளும் தங்களின் முழு பலத்தை டி20ஐயில் காட்ட முனைப்பு காட்டும்.
இந்தச் சூழலில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரை கணக்கில் கொண்டு, தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணியுடன் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. ஒரு போட்டி நான்கு நாள்கள் நடைபெறும். பெங்களூருவில் இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ இடைய முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி அக்டோபர் 30ஆம் தேதி, 2வது போட்டி நவம்பர் 6ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.
தற்போது ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் சூழலில், இந்தியா ஏ அணிக்கான ஸ்குவாடை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ரஞ்சிக் கோப்பை விளையாடும் அணிகள் பாதிக்காத வகையில், இந்தியா ஏ ஸ்குவாட்டை அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணி தேர்வுக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்தியா ஏ ஸ்குவாடுக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரின்போது, 4வது போட்டியில் கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து, ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்கா தொடரில் திரும்பி வர இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
அதை உறுதிசெய்யும் வகையில் இந்தியா ஏ ஸ்குவாடில் ரிஷப் பண்ட் கேப்டனாகி உள்ளார். ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக ஸ்குவாடில் இடம்பெறுவார். துருவ் ஜூரேல் பேக்அப் விக்கெட் கீப்பராக இருப்பார். இதனால், நாராயண் ஜெகதீசனுக்கு பிரதான ஸ்குவாடில் இடம் கிடைக்காது. அதேநேரத்தில், மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சன் இரு போட்டிகளுக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் போட்டியில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் நிலையில், 2வது போட்டியில் அனுபவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட் உடன் ஆயுஷ் மாத்ரே, நாராயண் ஜெகதீசன், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் உள்ளிட்ட பேட்டர்கள் இடம்பெற்றுள்ளனர். ஹர்ஷ் தூபே, தனுஷ் கோட்டியனான், மானவ் சுதார், உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாவது போட்டியில் ஆயுஷ் மாத்ரே, நாராயணன் ஜெகதீசன், ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு பதில் கேஎல் ராகுல், துருவ் ஜூரேல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
— BCCI (@BCCI) October 21, 2025
முதல் போட்டியில் இடம்பெற்றுள்ள அன்ஷூல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரன்ஷ் ஜெயின் ஆகியோருக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் இரண்டாவது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த வகையில் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா ஏ ஸ்குவாடை முழுமையாக இங்கு காணலாம்.
முதல் போட்டி ஸ்குவாட்: ரிஷப் பந்த் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மத்ரே, நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அன்ஷுல் காம்போஜ், அன்ஷுல் காம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரன்ஷ் ஜெயின்
2வது போட்டி ஸ்குவாட்: ரிஷப் பந்த் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அஹ்மத், குர்னூர் பிரர், அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ