)
IND vs AFG One Off Test, Team India Squad: ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பின்னர் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
| தேதி | போட்டி | நகரம் |
| ஜூன் 6 - மே 10 | டெஸ்ட் போட்டி | முலான்பூர் |
| ஜூன் 14 | முதல் ஒருநாள் போட்டி | தரம்சாலா |
| ஜூன் 17 | 2வது ஒருநாள் போட்டி | லக்னோ |
| ஜூன் 20 | 3வது ஒருநாள் போட்டி | சென்னை |
இதில் வரும் மே 19ஆம் தேதி அன்று (செவ்வாய்) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஸ்குவாடை இறுதி செய்ய, தேர்வுக்குழு கூடுகிறது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய அணி தேர்வு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், யார் யார் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் இடம்பெறுவார்கள் என்பதை இங்கு காணலாம்.
ஆப்கானிஸ்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெறவில்லை என்பதால், இதனால் WTC புள்ளிகளும் இந்தியாவுக்கு கிடைக்காது. ஆனால், அடுத்த ஓராண்டு காலம் இந்திய அணி டெஸ்டில் கவனம் செலுத்தும் என்பதால் சில முக்கிய வீரர்கள் இடம்பெறுவார்கள்.
ஆனால், அதேநேரத்தில் ஐபிஎல் தொடரில் அதிகம் விளையாடிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும். ஓடிஐ போட்டிகள் இருக்கிறது என்பதால் நிச்சயம் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு உறுதிதான்.
குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க அதிக வாய்ப்புள்ளது. முகமது சிராஜுக்கும் ஓய்வு கிடைக்கலாம். ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. முகமது ஷமியை ஓடிஐ போட்டிகளில் களமிறக்க வாய்ப்புள்ளது. எனவே, யார் யார் இந்திய அணியில் பந்துவீசப் போகிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டும்.
இதனால், அன்சுல் கம்போஜ், முகேஷ் குமார், ஆகிப் நபி போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இவர் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் அடுத்து அவர்கள் அதிகமாக விளையாட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். நிதிஷ் குமார் ரெட்டி இடம்பெறலாம்.
சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேலுக்கு ஓய்வு கிடைக்கும். ஏனென்றால் இவர்கள் ஓடிஐ தொடரில் விளையாட வேண்டும். வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார், ஹர்ஷ் தூபே, தனுஷ் கோட்டியான் உள்ளிட்ட ஆல்-ரவுண்டர்களில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ரவீந்திர ஜடேஜா நிச்சயம் இடம்பெறுவார், அவர்தான் கேப்டனாக செயல்படவும் அதிக வாய்ப்புள்ளது.
கேப்டன் சுப்மான் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். கேஎல் ராகுல் சீனியராக இந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், தேவதத் படிக்கல், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார், தனுஷ் கோட்டியான், அன்சுல் கம்போஜ், முகேஷ் குமார், ஆகிப் நபி.