)
India vs Australia, ODI Squad: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 3 ஓடிஐ போட்டிகள், 5 டி20ஐ போட்டிகளில் விளையாட உள்ளன. இதைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய அணியின் 15 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் தற்போது பெர்த் நகரில் பயிற்சி பெற்று வருகிறது. இன்னும் முதல் போட்டிக்கு இரண்டு நாள்களே இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய ஸ்குாவாடும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஸ்குவாடை முதலில் பார்ப்போம்.
சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்)
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா
பின்னர், ஆடம் ஜாம்பா தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் ஓடிஐ போட்டியில் இருந்து விலகியதால் மேத்யூ குஹ்னேமன் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஷ் பிலிப் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆடம் ஜாம்பா, ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் 2வது மற்றும் 3வது ஓடிஐ போட்டிகளில் விளையாடுவார்கள். மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் பிலிப் ஆகியோர் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுவார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் மற்றொரு வீரரும் விலகி உள்ளார்.
அடுத்தடுத்து உள்நாட்டு போட்டிகள், ஆஷஸ் தொடர் நடைபெற இருப்பதால் கேம்ரூன் கிரீனின் வேலைப்பளூவை கருத்தில்கொண்டு அவரை ஓடிஐ அணியில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது புறக்கணித்துள்ளது. அவர் காயத்தில் ஏதும் சிக்கவில்லை என்றாலும் பெரிதாக பந்துவீச முடியாது என்பதால் அவருக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேம்ரூன் கிரீன் விடுவிக்கப்பட்டு மார்னஸ் லபுஷேன் ஓடிஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இனி ஓடிஐ பக்கமே வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேம்ரூன் கிரீனின் விலகலால் இவர் அணிக்கு திரும்பி உள்ளார். அதேநேரத்தில், வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் கேம்ரூன் கிரீன்தான் அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விலகியதால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்தனர். ஆனால் அவர் காயத்தில் சிக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ