IND vs AUS: பிளேயிங் லெவனில் வரப்போகும் மாற்றம்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?

IND vs AUS: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2025, 04:27 PM IST
  • மேட் ஷாட் காயம் காரணமாக விலகினார்.
  • ஃபிரெஸர் மெக்கர்க் நாளை களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வருண் சக்ரவர்த்தி நாளை முக்கியமான வீரராக இருப்பார்.
IND vs AUS: பிளேயிங் லெவனில் வரப்போகும் மாற்றம்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?

IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் ஒரு ஐசிசி நாக்-அவுட் சுற்றில் மோத உள்ளன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.

Add Zee News as a Preferred Source

IND vs AUS: இந்திய அணியின் சுழல் பலம்

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி இந்திய அணிதான் (Team India). வங்கதேசம், பாகிஸ்தானை மட்டுமின்றி பலம் வாயந்த நியூசிலாந்தையும் தனது சுழல் பலத்தால் திக்கமுக்காட வைத்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை டாஸ் வெல்லவில்லை.

IND vs AUS: ஜொலிக்கும் ஆஸ்திரேலியா

மறுபக்கம், ஆஸ்திரேலியா (Team Australia) இந்த தொடருக்குள் நுழையும்போது யாருமே இந்த அணி அரையிறுதி வரும் என கணித்திருக்கவில்லை எனலாம். பாட் கம்மின்ஸ் தொடங்கி பல முன்னணி வீரர்கள் இல்லாதது, அனுபவம் குறைந்த பந்துவீச்சு யூனிட் என பல விமர்சனம் இருந்தாலும் தொடரின் முதல் போட்டியிலேயே 352 ரன்கள் இலக்கை அசால்ட்டாக சேஸ் செய்து காட்சிகளை மொத்தமாக மாற்றியது.

IND vs AUS: ஆடுகளம் எப்படி இருக்கும்?

முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடக்கிறது. இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே துபாயில் விளையாடி வருவதால் ஆடுகளத்தின் தன்மை நன்கு தெரிந்திருக்கும். துபாய் ஆடுகளங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் கருப்பு மண்களால் செய்யப்பட்டவை. இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தாலும், சுழற்பந்துவீச்சாளர்கள்தான் குறைவான எகானமியில் ரன்களை கொடுத்திருக்கிறார்கள் (Dubai Pitch Report).

IND vs AUS: X Factor வருண் சக்ரவர்த்தி

துபாயில் முதல் பேட்டிங்கில் 300 ரன்கள் எடுப்பது கடினம், 280 ரன்கள் வரை போராடி எடுக்கலாம். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மெதுவாகும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், ஸ்லோயர் பந்துகள் வீசும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இந்த ஆடுகளம் கைக்கொடுக்கும்.  இதை வைத்தும், X Factor கொண்ட வருண் சக்ரவர்த்தியை (Varun Chakaravarthy) வைத்தும் இந்திய அணி நேற்று நியூசிலாந்து வீழ்த்தியது. தற்போது அதையே செய்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம்.

IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவன்

இந்திய அணி அதன் பிளேயிங் லெவனை (Team India Playing XI) மாற்ற வேண்டிய அவசியமில்லை. நிச்சயம் முகமது ஷமி என்ற ஒரே ஒரு பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர்களுடன்தான் இந்திய அணி விளையாடும். கடந்த போட்டியை போலவே ஹர்திக் பாண்டியா 2வது வேகப்பந்துவீச்சாளராக இருப்பார். வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவீந்திரா ஜடேஜா ஆகியோர் பௌலிங் அட்டாக்கில் இருப்பார்கள்.

IND vs AUS: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்

மாறாக ஆஸ்திரேலிய அணி பென் த்வார்ஷுயிஸ், ஸ்பென்சர் ஜான்சன் என 2 இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுடனும், நாதன் எல்லிஸ் 3வது வேகப்பந்துவீச்சாளராக களமிறக்கும். ஆடம் ஸாம்பா பிரீமியம் ஸ்பின்னராக இருப்பார். டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாகவும் செயல்படுவார்கள். ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் (Team Australai Playing XI).

IND vs AUS: மேட் ஷார்ட் மாற்று வீரர்

மேட் ஷார்ட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் கூப்பர் கோனொலி அணிக்குள் வந்துள்ளார். அந்த வகையில் கூப்பர் கோனொலி ஓப்பனிங்கில் இறங்குவாரா, ஃப்ரேஸர் மெக்கர்க் இறங்குவாரா என்பது மட்டுமே கேள்வியாக இருக்கிறது. இந்திய அணி நியூசிலாந்தை போல ஆஸ்திரேலியாவையும் சுழலால் தாக்குதல் தொடுக்க முயற்சிக்கும், அதை காண நாளை வரை காத்திருக்கவும்.

IND vs AUS: பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இந்திய அணி (கணிப்பு): ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடஜோ, வருண் சக்வர்த்தி, குல்தீப் யாதவ், முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணி (கணிப்பு): ஃப்ரேஸர் மெக்கர்க்/கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், மேக்ஸ்வெல் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, பென் த்வார்ஷுயிஸ், ஸ்பென்சர் ஜான்சன்

மேலும் படிக்க | டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? பழிவாங்க நல்ல வாய்ப்பு!

மேலும் படிக்க | பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - இன்சமாம் உல் ஹக்

மேலும் படிக்க | IPL 2025: ரன்மழை பொழியும் கருண் நாயர்... ஐபிஎல் தொடரில் எந்த அணியில் உள்ளார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News