India vs Australia ODI Series: ஆஸ்திரேலியாவில் மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20ஐ போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சுமார் 7 மாதங்களுக்கு பின் விளையாட இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. 2-0 என்ற கணக்கில் இந்தியா நேற்று தொடரை வென்ற நிலையில், இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. சுப்மான் கில் தலைமையில் இந்திய வீரர்கள் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
IND vs AUS ODI: ஆஸ்திரேலிய பறந்த ஓடிஐ வீரர்கள்
மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் இந்திய அணியோடு இன்றே புறப்பட்டனர். மேலும், நேற்று டெல்லியில் நடந்த மேற்கு இந்திய தீவுகளுக்கான டெஸ்ட் போட்டியின் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த கேப்டன் சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரும் இன்றே புறப்பட்டனர்.
IND vs AUS ODI: டி20 அணி விரைவில் புறப்படும்
மேலும், நட்சத்திர வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா ஆகியோரும் டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். தற்போதைக்கு ஓடிஐ தொடரில் விளையாடும் வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளனர். டி20ஐ தொடரில் விளையாடும் இந்திய அணிகள் இன்னும் சில நாள்களில் ஆஸ்திரேலியா புறப்படுவார்கள் என தெரிகிறது.
IND vs AUS ODI: ஓடிஐ போட்டிகளின் அட்டவணை
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. வரும் அக். 19ஆம் தேதி பெர்த் மைதானத்தில் முதல் ஓடிஐ போட்டியும், அக். 23ஆம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் 2வது ஓடிஐ போட்டியும், அக். 25ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 3வது ஓடிஐ போட்டியும் நடைபெற இருக்கிறது.
IND vs AUS ODI: போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்
ஓடிஐ போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனல்கள் வாயிலாக தொலைக்காட்சியிலும் போட்டிகளை நேரடியாக காணலாம், ஆனால் இவற்றுக்கு சந்தா முக்கியம். இந்தியாவில் டிடி சேனல் வாயிலாகவும் தொலைக்காட்சியில் இலவசமாக காணலாம்.
IND vs AUS ODI Playing XI: இந்திய அணியின் காம்பினேஷன் எப்படி இருக்கும்?
ஆஸ்திரேலியா ஓடிஐ தொடரை பொருத்தவரை ஏற்கெனவே இந்திய அணியின் பிளேயிங் லெவன் செட்டாகிவிட்டது எனலாம். ஓபனிங்கில் கேப்டன் சுப்மான் கில் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்குவார்கள். நம்பர் 3 இடத்தில் விராட் கோலியும், நம்பர் 4இல் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் களமிறங்குவார்கள். விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்படுவார்.
ஆல்-ரவுண்டர்களாக அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் இடம்பெறுவார்கள். குல்தீப் யாதவ் ப்ரீமியம் சுழற்பந்துவீச்சாளராக இருப்பார். பும்ரா இல்லாத நிலையில், முகமது சிராஜ் வேகப்பந்துவீச்சுக்கு தலைமை தாங்குவார். மீதம் உள்ள ஒரு இடத்தில் அர்ஷ்தீப் சிங் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதன்மூலம், மூன்று வேகப்பந்துவீச்சாளர், மூன்று சுழற்பந்துவீச்சாளர் ஆப்ஷன் இந்தியாவுக்கு கிடைக்கும்.
IND vs AUS ODI Playing XI: ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு இருக்கா?
இந்திய அணி நம்பர் 8இல் பேட்டிங் செய்யும் பந்துவீச்சாளரை விளையாட வைக்கும் முனைப்பில் இருக்கிறது. எனவே, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில், ஹர்ஷித் ராணாவும் பேட்டிங்கில் பங்களிப்பு அளிப்பார் என்ற நம்பிக்கை இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டால் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்படலாம். இதனால், இந்திய அணிக்கு நான்கு வேகப்பந்துவீச்சாளர் ஆப்ஷன் கிடைக்கும். ஆடுகளத்தை பொறுத்து இந்திய அணி இந்த முடிவை எடுக்கலாம். பிரசித் கிருஷ்ணா வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பேக்அப்பாக இருப்பார். ஜெய்ஸ்வால் ஓப்பனர்களுக்கும், துருவ் ஜூரேல் கேஎல் ராகுலுக்கும் பேக்அப்பாக இருப்பார்கள்.
மேலும் படிக்க | இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: இரண்டு முக்கிய வீரர்கள் விலகல்!
மேலும் படிக்க | அவசர அவசரமாக லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய விராட் கோலி! என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









