டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? பழிவாங்க நல்ல வாய்ப்பு!

IND vs AUS: சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முக்கிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2025, 10:46 AM IST
  • இந்தியா - ஆஸ்திரேலியா நாளை மோதுகின்றன.
  • ஆஸ்திரேலியாவை பழிவாங்க இந்திய அணி காத்திருக்கிறது.
  • தொடர்ச்சியாக 3வது முறையாக பைனல் போகவும் இந்திய அணி முனைப்பு காட்டும்.
டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? பழிவாங்க நல்ல வாய்ப்பு!

India vs Australia, Semi Finals: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (ICC Champions Trophy 2025) அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்றோடு குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. ஏற்கெனவே, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், எந்தெந்த அணிகள் அரையிறுதியில் மோதும் என்பது உறுதியாகாமல் இருந்தது.

Add Zee News as a Preferred Source

IND vs AUS: முதல் அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா

அந்த வகையில், நேற்றைய கடைசி குரூப் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றதன் மூலம் முதல் அரையிறுதியில் இந்திய அணி (A1), ஆஸ்திரேலிய அணியையும் (B2); 2வது அரையிறுதி போட்டியில் தென்னைாப்பிரிக்கா அணி (B1), நியூசிலாந்து அணியையும் (A2) எதிர்கொள்கின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.

IND vs AUS: ஆஸ்திரேலியாவை பழிவாங்க நல்ல வாய்ப்பு

கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் ஆகியவற்றில் இந்திய அணி (Team India), ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு பழிவாங்க ஒரு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது எனலாம். துபாய் இரு அணிகளுக்கும் பொதுவான சூழல் என்றாலும் ஆசிய சூழல், சற்றே பலவீனமான ஆஸ்திரேலியாவின் (Team Australia) பந்துவீச்சு படை ஆகியவை இந்திய அணிக்கு சாதகமான விஷயங்களாக இருக்கின்றன. இவற்றைவிட இந்திய அணி இந்த தொடர் முழுவதும் துபாயிலேயே விளையாடுவதால் ஆடுகளத்தின் தன்மையையும் அறிந்திருப்பார்கள், பயணம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவை ஐசிசி தொடரில் வீழ்த்த இதை விட பிரமாதமான வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது எனலாம்.

IND vs AUS: இந்தியாவின் மெயின் வில்லன் டிராவிஸ் ஹெட் 

மேலும், கடந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2023 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என அனைத்திலும் இந்திய அணியை தோல்விக்கு தள்ளியவர் என்றால் அது டிராவிஸ் ஹெட்தான் (Travis Head). 2023 WTC பைனலின் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள், 2023 உலகக் கோப்பையில் 137 ரன்கள், பார்டர் கவாஸ்கர் தொடரில் 9 இன்னிங்ஸில் 448 ரன்களை குவித்து தொடரில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதாவது, இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வில்லனாக விளங்கி வருகிறார்.

IND vs AUS: டிராவிஸ் ஹெட்டை வீழ்த்த ஸ்கெட்ச்

அந்த வகையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்தகால கசப்பான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய அணி அவருக்கு என தனித் திட்டம் தீட்டியாக வேண்டும். கடந்த 2023 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக 2 சதங்களை பதிவு செய்த டேரில் மிட்செலை வீழ்த்த, இந்த முறை தனித் திட்டம் நேற்று அதில் வெற்றியும் கண்டிருந்தது ரோஹித் - கம்பீர் கூட்டணி. எனவே, அதை போல் டிராவிஸ் ஹெட்டையும் ஸ்கெட்ச் போட்டு தூக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

IND vs AUS: வருண் சக்ரவர்த்தி vs டிராவிஸ் ஹெட்

அதற்கு துருப்புச்சீட்டாக இருப்பவர் வருண் சக்ரவர்த்திதான் (Varun Chakaravarthy). நியூசிலாந்து உடனான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருணை, பெரும்பாலும் பல பேட்டர்கள் கணிக்கத் தவறுகின்றனர். வலது கை பேட்டராக இருந்தாலும், இடது கை பேட்டராக இருந்தாலும் சரி ஒரு பேட்டரை வீழ்த்த வருண் பல ஆயுதங்களை கையில் வைத்திருக்கிறார். அந்த சூழலில், டிராவிஸ் ஹெட்டை பவர்பிளேவிலேயே விக்கெட் எடுத்தால்தான் இந்திய அணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் எனலாம். காரணம், டிராவிஸ் ஹெட் பவர்பிளேவிலேயே ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பிவிடும் அளவிற்கு வல்லமைப்படைத்தவர்.

IND vs AUS: முதல் ஓவரிலேயே வருண் பந்துவீசனும்...

எனவே அவர் செட்டிலாவதற்கு முன்னரே அவரது விக்கெட்டை இந்தியா கைப்பற்றியாக வேண்டும். பவர்பிளேவில் அவர் நிச்சயம் கிரீஸில் இருந்துக்கொண்டே வருண் சக்ரவர்த்தியை விளையாடி விட முடியாது. கண்டிப்பாக, இறங்கிவந்து விளையாட வேண்டும். அவர் அதிரடி காட்ட துடிக்கும்போது விக்கெட் விழுவதற்கான வாய்ப்பும் அதிகமாகும். எனவே, முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் உள்பட பலரும், ஹெட் முதல் ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்தால் வருண் சக்ரவர்த்தி கையில், ரோஹித் சர்மா (Rohit Sharma) தயங்காமல் பந்தை கொடுக்கலாம் என்கிறார்கள். ஆம், இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே வருண் சக்ரவர்த்தி பந்துவீச வருவதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள்.

மேலும், பிளேயிங் லெவனில் இனி மாற்றம் தேவையில்லை என்கிறார் அஸ்வின். அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். துபாயில் ஆடுகளத்தின் தன்மை இந்திய அணிக்கு நன்கு தெரிந்துவிட்டது. அப்படியிருக்க பவர்பிளேவில் முதல் ஸ்பெல்லில் வருண் 3 ஓவர்களை போடலாம். மறுமுனையில் ஷமியை போடவைக்கலாம். அவரது ஸ்பெல் முடிந்த உடன் அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியாவை வைத்து அடுத்த ஸ்பெல்லை போட வைக்கலாம். மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். டிராவிஸ் ஹெட் மட்டுமின்றி, ஜாஷ் இங்லிஸின் ரிவர்ஸ் ஸ்வீப் தாக்குதலுக்கு எதிராகவும் வருண் சக்ரவர்த்தி கைக்கொடுப்பார் எனலாம்.

மேலும் படிக்க | அசைக்க முடியாத ஆல்ரவுண்டர்; அஸ்மதுல்லா ஓமர்சாய் எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்?

மேலும் படிக்க | IPL 2025: ரன்மழை பொழியும் கருண் நாயர்... ஐபிஎல் தொடரில் எந்த அணியில் உள்ளார்?

மேலும் படிக்க | பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - இன்சமாம் உல் ஹக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News