)
India vs Australia 1st ODI Highlights: பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முக்கியமான டாஸை வென்றதால் இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது.
இந்திய அணி டாப் ஆர்டர் கடுமையாக சொதப்பியது. ரோஹித் சர்மா 8, விராட் கோலி 0, சுப்மான் கில் 10 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து அக்சர் பட்டேல் உடன் கேஎல் ராகுல் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே ஒரு இன்னிங்ஸிற்கு 26 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. அக்சர் பட்டேல் - கேஎல் ராகுல் ஜோடி 39 ரன்களை குவித்தது. இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப். அக்சர் பட்டேல் 31, கேஎல் ராகுல் 38 ரன்களை எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் நிதிஷ் ரெட்டி 2 சிக்ஸர்களை அடிக்க 19 ரன்களை எடுத்தார்.
இதன்மூலம் இந்தியா 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை அடித்தது. ஹசில்வுட், மிட்செல் ஓவன், குன்ஹமேன் தலா 2 விக்கெட், ஸ்டார்க் மற்றும் எல்லிஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். D/L முறையில் ஆஸ்திரேலிய அணிக்கான இலக்கு 131 ரன்களாக குறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை 21.1 ஓவர்களிலேயே அடித்துவிட்டது. டிராவிஸ் ஹெட் 8, மேத்யூ ஷார்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மிட்செல் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். அவருடன் விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி 55 ரன்களை சேர்த்தது. பிலிப் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்ஷ் - ரென்ஷா ஜோடி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தது. மார்ஷ் 46 ரன்கள், மேத்யூ ரென்ஷா 21 ரன்கள் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷ் வென்றார்.
Australia win the 1st ODI by 7 wickets (DLS method). #TeamIndia will look to bounce back in the next match.
— BCCI (@BCCI) October 19, 2025
https://t.co/O1RsjJTHhM#AUSvIND pic.twitter.com/0BsIlU3qRC
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தற்போது முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வரும் அக். 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. போட்டிக்கு மூன்று நாள் இடைவெளி இருப்பதால் இந்திய அணி இன்னும் சிறப்பாக பயிற்சிபெற்று வரும் என எதிர்பார்க்கலாம். 2வது போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணிக்கு தொடரை கைப்பற்றும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி அடுத்த போட்டிக்கு ஹர்ஷித் ராணாவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா சேர்த்து விளையாடும்பட்சத்தில் வேகப்பந்துவீச்சில் இன்னும் பலமாகும். ஹர்ஷித் ராணா 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ