Ind vs Eng 1st Test: இன்று கடைசி நாள்.. என்ன நடக்கும்? வெல்லப்போவது யார்?

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டி இன்று நடக்க உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jun 24, 2025, 08:56 AM IST
  • இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி
  • இன்று கடைசி நாள் போட்டி
Ind vs Eng 1st Test: இன்று கடைசி நாள்.. என்ன நடக்கும்? வெல்லப்போவது யார்?

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டியின் கடைசி நாள் இன்று. இங்கிலாந்து அணிக்கு 
371 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 21 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 350 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு தேவையாக உள்ளது. பென் டக்கெட் மற்றும் ஜாக் கார்லி களத்தில் உள்ளனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 24) இங்கிலாந்து அணிக்கு தேவையாக இருக்கும் 350 ரன்களை எட்டி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழும்பி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

இங்கிலாந்தின் பேஸ் பால் முறைப்படி பார்த்தால், அந்த அணி இந்த இலக்கை துரத்தி வெற்றி பெறவே முயற்சிக்கும். மற்ற அணியாக இருந்தால், போட்டியை டிரா செய்வதையும் ஒரு ஆஃப்ஷனாக வைத்திப்பர். ஆனால் இங்கிலாந்து அணி டிரா என்ற எண்ணத்தை மனதில் வைத்திருக்க வாய்ப்புகள் குறைவே. இங்கிலாந்து அணி கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ளது. அவர்கள் ஒரு போட்டியை கூட தற்போதைக்கு டிரா செய்ய முயலவில்லை. எனவே இங்கிலாந்து அணி இந்த இலக்கை துரத்தி வெற்றிபெற முயற்சிக்கும். 

மேலும், அவர்களிடம் அதிரடியாக விளையாட ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் உள்ளிட்டோர் உள்ளனர். ஒருநாள் போட்டியாக இந்த நாளை அவர்கள் கையாண்டால், நிச்சயம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. மறுபக்கம் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்த 10 விக்கெட்கள் தேவையாக உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் விக்கெட்களை சீக்கிரம் வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி வெற்றி பெறலாம். ஒருவேளை விக்கெட்களை வீழ்த்த இந்திய அணி தாமதித்தால், இங்கிலாந்து வெற்றி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களாக கிறிஸ் வோக்ஸ்,  பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் மட்டுமே 71 ரன்களை சேர்த்தனர். எனவே இந்திய அணி பேட்டர்களை வீழ்த்தினால் மட்டும் போதாது, பந்து வீச்சாளர்களையும் வீழ்த்த வேண்டும். அதேபோல் இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு உதவியாக மற்ற பந்து வீச்சாளர்கள் செயல்படவில்லை. அவர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர். முதல் இன்னிங்ஸில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்களை வீழ்த்தினாலும், 20 ஓவர்களில் 128 ரன்களை வாரி வழங்கி உள்ளார். அதேபோல் சீராஜ் 27 ஓவர்கள் வீசி 122 ரன்களை வழங்கி உள்ளார். மேலும், 6 ஓவர்களை வீசிய ஷர்துல் தாக்கூர் 38 ரன்களை வாரி வழங்கினார். எனவே முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி செய்யாமல் இருந்தால், போதுமானது.  

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டி இன்று (ஜூன் 24) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் இணையம் மற்றும் மொபைல் ஆஃப்பில் பார்க்கலாம். மேலும், தொலைக்காட்சியில், சோனி டென் 1, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5ல் பார்க்கலாம்.  

மேலும் படிங்க: ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் - ட்ரம்ப அறிவிப்பு! ஒரே இரவில் நடந்த சம்பவம்!

மேலும் படிங்க: ஒரே போட்டியில் ரிஷப் பண்ட் செய்த எக்கச்சக்க சாதனைகள்... உண்மையிலேயே ஸ்பைடர் மேன் தான்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News