India vs England: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பௌலிங் தேர்வு செய்தார். காரணம் இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்... ரெஸ்ட் எடுக்க வந்த இடத்திலும் பஞ்சாயத்து!
எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் அணிக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். மேலும் கேப்டன் சுப்மான் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் நல்ல ஒரு பாட்னர்ஷிப் கொடுத்தனர். இவர்கள் இருவருமே சதம் அடிக்க அணிக்கு நல்ல ஒரு ஸ்கோர் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த சாய் சுதர்சன், கருண் நாயர் ஆகியோர் ரன்கள் அடிக்க தவறினர்.
இங்கிலாந்து பேட்டிங்
முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது. ஒல்லி போப் சதம் அடித்தும், ஹாரி புரூக் 0 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், எவ்வளவு விரைவாக இந்திய அணி இங்கிலாந்து அணியின் வீரர்களின் விக்கெட்களை எடுக்கும் பட்சத்தில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இன்று முழுவதும் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் பட்சத்தில் இந்த போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா மட்டுமே சிறப்பாக வந்து வீசி உள்ளார். மூன்று விக்கெட்களையும் அவர் மட்டுமே எடுத்துள்ளார். அவருக்கு உதவு விதமாக யாருமே பந்து வீசவில்லை.
இந்நிலையில் அடுத்த போட்டியில் சிராஜுக்கு பதிலாக ஹர்ஸ்தீப் சிங்கை கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ரன்கள் அடிக்க சொதப்பும் பட்சத்தில் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடரில் நன்றாக விளையாடியிருந்தாலும் முதல் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த போட்டியின் முடிவு அடுத்த போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்பதை தீர்மானிக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கேப்டன் ஆன உடன்... விதியை மீறிய சுப்மான் கில்... அடுத்த போட்டியில் அவருக்கு தடையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ