)
India tour of England: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 835 ரன்கள் உட்பட ஐந்து சதங்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் வரும் ஜூலை இரண்டாம் தேதி எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காமில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் சுப்மாம் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தீவிர ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்தியாவின் பவுலின் அட்டாக் திணறி வருகிறது.
முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கும் பவுலிங் தான் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற தவறியது. இதனால் அடுத்த சுழற்சியில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த தொடர் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்திய ஏ அணியில் இருந்து இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ஹர்ஷித் ராணா இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதில் வேறொருவர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்துல் தாக்கூருக்கு பதில் நிதிஷ்குமார் ரெட்டி?
பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என எதிலுமே ஷர்துல் தாக்கூரால் கை கொடுக்க முடியவில்லை. லோயர் ஆட்டரில் விளையாட ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அடுத்த போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடரிலும் சிறப்பாக விளையாடி இருந்தார் நிதிஸ் குமார் ரெட்டி.
பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்?
ஐபிஎல்லில் சிறப்பாக பந்து வீசி இருந்ததால் இங்கிலாந்து தொடரில் பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியில் அவரால் அவ்வளவு சிறப்பாக பந்து வீச முடியவில்லை. மேலும் ரன்களையும் வாரி வழங்கி வருகிறார். இதன் காரணமாக அவருக்கு பதில் 2வது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பும்ராவிற்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வு வழங்கப்படும் பட்சத்தில் பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது.
சாய் சுதர்சனுக்கு பதில் அபிமன் ஈஸ்வரன்?
முதல் டெஸ்டில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நன்றாக விளையாடியிருந்தாலும் சாய் சுதர்சன் இரண்டு இன்னிங்ஸ்களும் ரன்கள் அடிக்க திணறினார். முதல் இன்னிங்சில் ஜீரோ ரன்களில் வெளியேறியிருந்த அவர், இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் நீண்ட நாட்களாக இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பேட்டரை குறைத்து விட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்கலாமா என்றும் இந்திய அணி யோசித்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ