IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்டில் பும்பராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தாலும் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு உதவினர். இரண்டாவது இன்னிங்ஸில் 608 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்க இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்டில் கேப்டன் சுப்மான் கில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் அடித்திருந்தார். இவரது சிறப்பான பேட்டிங் மூலம் இந்திய அணி இங்கிலாந்துக்கு அதிகபட்ச டார்கெட்டை செட் செய்ய உதவியது. மேலும் முதல் இன்னிங்சில் சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்களை எடுத்து இருந்தார். இவர்களது சிறப்பான பவுலிங் அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.
Edgbaston
— BCCI (@BCCI) July 6, 2025
Captain Shubman Gill #TeamIndia | #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/qXph7DRhMx
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் வரும் ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பும்ரா விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவருடன் இணைந்து ஆகாஸ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசித் கிருஷ்ணாவிற்கு பதில் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல வாஷிங்டனின் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கை விட பேட்டிங்கில் கூடுதலாக உதவி இருந்தார். முதல் மற்றும் 2வது டெஸ்ட் போட்டியில் கருண் நாயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரால் பெரிதாக ரன்கள் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ