India tour of England, 2025: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.
)
India tour of England, 2025: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றது இல்லை.
அணியில் மாற்றம்?
முதல் டெஸ்டில் நன்றாக பேட்டிங் செய்திருந்தாலும் பவுலிங் மற்றும் பில்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கேப்டன் சுப்மான் கில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். தனது சொந்த ஊரான பஞ்சாப்பிலிருந்து இரண்டு பவுலர்களை பயிற்சிக்காக இறக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஹர்பிரித் பிரார் மற்றும் ஜெக்ஜித் சிங் சாந்து ஆகிய இருவரும் தற்போது இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் டெஸ்ட் முடிந்ததும் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய ஹர்ஷித் ராணாவிக்ரு பதிலாக இவர்கள் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இருப்பினும் இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் பயிற்சிக்காக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய அணியில் இடம் பெற மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அனால் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
A feeling of home away from home in Birmingham #TeamIndia | #ENGvIND | @arshdeepsinghh
— BCCI (@BCCI) June 29, 2025
WATCH
இந்திய அணியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அர்ஸ்தீப் சிங் அணியில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. அதே போல ஒரு பேட்டரை குறைத்துவிட்டு குல்தீப் யாதவை அணியில் எடுக்கலாமா என்ற பேச்சும் நிலவி வருகிறது. ஆனால் ஒரு பேட்டர் இல்லாமல் செல்வது அணிக்கு பாதகமாகி விடுமா என்பதால் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ