அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கம் முதலே அணி வீரர்கள் இங்கிலாந்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கிலாந்து A அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்ற நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு உள்ளேயே ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெற்றது. சுப்மான் கில் தலைமையில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால் கில்லின் தலைமை பண்பு எப்படி இருக்கும் என்று பார்க்க பலரும் ஆவலாக உள்ளனர்.
— BCCI (@BCCI) June 15, 2025
அணியில் இணைந்த கூடுதல் வீரர்?
இந்தியா A அணியில் சர்பராஸ்கான், ருதுராஜ் கைக்குவாட், அன்சுல் கம்போஜ், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஆனால் அவர்கள் யாருமே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இவர்கள் அனைவரும் நாடு திரும்ப தயாரான நிலையில், ஹர்ஷித் ராணா மட்டும் இந்திய அணி வீரர்களுடன் தங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த ஹர்ஷித் ராணா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது ஹர்ஷித் ராணாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
SQUAD UPDATE!
Bowling all-rounder #HarshitRana has been added to #TeamIndia’s squad for the 5-match Test series against England!#ENGvIND | 1st Test starts FRI, JUN 20, 2:30 PM Streaming on JioHotstar pic.twitter.com/qwjJDDjEv2
— Star Sports (@StarSportsIndia) June 17, 2025
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்றும், ஏதேனும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பும்ரா விளையாடாத பொழுது ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்படுவாரா என்று கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா முதல் முறையாக இடம் பெற்றார். ஆனால் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் முதலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ராணா மொத்தமாக நான்கு விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ