)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 247 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா நான்கு விக்கெட்களை எடுத்துள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாத நிலையில் சிராஜ் தலைமை பந்துவீச்சாளராக அணியை வழிநடத்தி சென்று கொண்டு உள்ளார்.

இங்கிலாந்து தொடரில் சிராஜ்
கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் முகமது சிராஜ் அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார். பும்ரா இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில் சிராஜ் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். கிட்டத்தட்ட இதுவரை 155 ஓவர்கள் வீசி உள்ள சிராஜ் 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் மட்டுமே.
முகமது சிராஜ் சம்பளம்
முகமது சிராஜ் பிசிசிஐயின் கிரேடு ஏ பிரிவில் உள்ளார். இதன் மூலம் வருடத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சிராஜ் 15 லட்சம் சம்பளமாக பெறுகிறார். இங்கிலாந்து தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடி உள்ள முகமது சிராஜ் மொத்தமாக 75 லட்சம் சம்பளமாக பெற உள்ளார். பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள நிலையில் அவர் 45 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற உள்ளார். இதன் மூலம் பும்ராவை விட சிராஜ் இங்கிலாந்து தொடரில் அதிக வருமானம் பெற உள்ளார். அதே போல ஒரு வீரர் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்றும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்து இருந்தது.
இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓவர்கள் வீசிய இந்திய வீரர்கள்!
இங்கிலாந்து தொடரில் அதிக ஓவர்கள் வீசிய வீரர்கள்
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஓவர்கள் வீசிய பவுலர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ