IND vs NZ: இந்தியா அரையிறுதியில் யாரோடு மோதும்...? நியூசிலாந்து வெற்றி பெற 70% வாய்ப்பு - ஏன்?

IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் துபாய் ஆடுகளம் யாருக்கு சாதகம், இரு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பு, போட்டியை நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது என்ற முழு விவரங்களையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 1, 2025, 11:59 PM IST
  • துபாய் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கே அதிக சாதகமாக இருக்கும்.
  • இந்திய அணி கடந்த 12 ஓடிஐ போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளது.
  • நாளை வெற்றி பெறும் அணி குரூப் ஏ - வில் முதலிடம் பிடிக்கும்.
IND vs NZ: இந்தியா அரையிறுதியில் யாரோடு மோதும்...? நியூசிலாந்து வெற்றி பெற 70% வாய்ப்பு - ஏன்?

IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் லீக் 2025 தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நாளையோடு (மார்ச் 2) நிறைவடைய இருக்கின்றன. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன.

Add Zee News as a Preferred Source

IND vs NZ: துபாயில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா

குரூப் - பி போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. குரூப் - பி பிரிவில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தையும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இரு அணிகளில் எந்த அணி துபாயில் இந்திய அணியுடன் முதல் அரையிறுதியில் மார்ச் 4ஆம் தேதி விளையாடும் என்பது நாளைய இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பின்னரே தெரியவரும்.

இந்தியா - நியூசிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் குரூப் - ஏ பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். முதலிடத்தை பிடிக்கும் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும் (B2), இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவையும் (B1) மேற்கொள்ளும். தற்போது இரு அணிகளும் துபாயில் விளையாடும் வாய்ப்பிருப்பதால் அரையிறுதிப் போட்டிக்கு தயார் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக இரு அணிகளுமே துபாய்க்கு பறக்கின்றன.

IND vs NZ: அரையிறுதியில் இந்திய மோதப்போவது யாருடன்?

அந்த வகையில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவையும், தோல்வியடைந்தால் தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்ளும். இரு அணிகளையும் எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதால் அவர்களை வீழ்த்த நாளை நியூசிலாந்துக்கு எதிரான குரூப் சுற்று போட்டியை வெல்ல வேண்டியது முக்கியமாகும். துபாயில் நாளை மழைக்கு வாய்ப்பில்லை என்பதால் முழு போட்டியையும் காணும் வாய்ப்புள்ளது.

IND vs NZ: துபாய் ஆடுகளம் நியூசிலாந்துக்கே சாதகம்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் செயலியிலும் நேரலையில் காணலாம். துபாய் ஆடுகளம் ஆரம்பத்தில் பெரிதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், வில் ஓ ரூக் உள்ளிட்ட தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். எனவே, துபாய் ஆடுகளம் நியூசிலாந்துக்கே அதிக சாதகமாக இருக்கும்.

IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றம்

துபாயில் இரண்டாவது பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்தியாவை போல் நியூசிலாந்து அணியும் டாஸ் வென்றால் முதலில் பந்துவீசவே திட்டமிடும். கடந்த இரண்டு போட்டிகளில் டாஸ் வெல்லவில்லை என்றாலும், டாஸ் வென்றால் முதலில் பந்துவீசவே தாங்கள் திட்டமிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார். கடந்த 12 ஓடிஐ போட்டிகளாக இந்தியா டாஸை தோற்று வருகிறது.

நாளைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில், சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. சுப்மன் கில் ராசிக்காவது இந்தியா டாஸை வெல்லுமா என பார்க்கலாம். ரோஹித்துக்கு பதில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவிற்கு பதில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம். நியூசிலாந்து அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

IND vs NZ: பிளேயிங் லெவன் கணிப்பு

இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

நியூசிலாந்து அணி: வில் யங், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டாம் லதாம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கெல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), வில் ஓ ரூர்க், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன்

மேலும் படிக்க | அசைக்க முடியாத ஆல்ரவுண்டர்; அஸ்மதுல்லா ஓமர்சாய் எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்?

மேலும் படிக்க | இந்தியா - நியூசிலாந்து போட்டி.. ரோகித்தின் நிலை என்ன? முக்கிய பவுலர் நீக்கம்?

மேலும் படிக்க | IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடுவாரா? ஆடினால் எந்த இடத்தில் ஆடுவார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News