IND vs NZ T20 World Cup Final 2026: ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை அரையிறுதி போட்டியை சேர்த்து மொத்தம் 8 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 7ல் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் படுதோல்வியை சந்தித்தது.
பிப்ரவரி 07ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி போட்டியை எட்டி உள்ளது. அரையிறுதிக்கு போராடி வந்த இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தில் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இப்போட்டி வரும் ஞாயிற்றுகிழமை மார்ச் 08 அன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது நியூசிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
பயத்துடன் ரசிகர்கள்
நியூசிலாந்தை ஒப்பிடுகையில் இந்திய அணி நல்ல பலத்துடனே உள்ளது. இருப்பினும் இந்திய அணி எப்படி கோப்பையை வெல்லப்போகிறது என்ற பயத்துடன் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இறுதி போட்டி நடக்கும் மைதானமே. நரேந்திர மொடி மைதானம் இந்திய அணிக்கு ஒரு பெரிய தலைவலியாக இருந்துள்ளது. அங்கு ஐசிசி போட்டிகளில் இந்திய அணியின் ரெக்கார்ட் மோசமாக உள்ளது. இதனாலேயே ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐசிசி போட்டிகளில் இந்திய அணியின் ரெக்கார்ட் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
India Records In Ahmedabad Narendra Modi Stadium: நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவின் மோசமான ரெக்கார்ட்
இந்திய அணி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், இதுவரை 4 ஐசிசி போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் இரண்டு முக்கிய போட்டிகளில் இந்தியா மோசமான தோல்வியை அடைந்துள்ளது.
1) 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அக்டோபர் 14ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 191 ரன்கள் அடித்தது. இதையடுத்து இந்திய அணி 30 ஓவர்களிலேயே 192 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
2) 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 240 ரன்கள் அடித்தது. அதன்பின் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 241 ரன்கள் அடித்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
3) 2026 டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 18ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய நிலையில், அப்போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4) 2026 டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 22ஆம் தேதி சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 187 ரன்கள் அடித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 111 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றியை பெற்றது.
வரலாற்றை மாற்றுமா இந்திய அணி
இந்திய அணி நல்ல பலத்துடன் இருந்தாலும், நரேந்திர மோடி மைதானத்தில் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பீதியில் இருக்கின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோரும் சிறு பயத்துடனே இருப்பார்கள். ஏனென்றால், 2023 ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றது அவர்களது மனதில் தீராத வலியாகவே இருக்கும். இந்த சூழலில், வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 08 நடைபெறும் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வென்று வரலாற்றை மாற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரு அணி வீரர்கள் விவரம்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
நியூசிலாந்து: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷாம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், இஷ் சோதி, கோல் மெக்கோஞ்சி.
மேலும் படிக்க: IND vs ENG: இந்தியா ஜெயிக்க காரணமாக இருந்த 3 முக்கிய காரணங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









