நியூசிலாந்தை நசுக்கிய வருண் சக்ரவர்த்தி... அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா!

IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சுழல் ஜாலத்தால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2025, 08:35 AM IST
  • வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகிறது.
  • லாகூரில் 2வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து மோதல்.
நியூசிலாந்தை நசுக்கிய வருண் சக்ரவர்த்தி... அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா!

IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சுழல் ஜாலத்தால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியின் ஹைலைட்ஸை இங்கு காணலாம்.

Add Zee News as a Preferred Source

IND vs NZ: நியூசிலாந்துக்கு 250 ரன்கள் இலக்கு

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் டாஸை வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு பதில் வருண் சக்ரவர்த்தியையும், நியூசிலாந்து அணியில் கான்வேவுக்கு பதில் டேரில் மிட்செலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 79, ஹர்திக் பாண்டியா 45, அக்சர் பட்டேல் 42 ரன்களை அடித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஜேமீசன், வில்லியம் ஓ ரூக், சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

IND vs NZ: நியூசிலாந்தின் நல்ல தொடக்கம்

தொடர்ந்து, 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்தியா பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தாலும், நியூசிலாந்து அணி பவர்பிளேவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்தது. அதே நேரத்தில் இந்தியா பவர்பிளேவில் 37 ரன்களை எடுத்த நிலையில், நியூசிலாந்து 44 ரன்களை எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ரவீந்திரா 6 ரன்களில் காலியானார். பவர்பிளேவில் ஷமி 3 ஓவர்கள், பாண்டியா 4 ஓவர்கள், அக்சர் பட்டேல் 2 ஓவர்கள், கடைசி 10வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீசினார்.

IND vs NZ: சுழலில் சிக்கிய நியூசிலாந்து

நியூசிலாந்து அணி அந்த வகையில் தொடக்க கட்டத்தில் சிறப்பான நிலையிலேயே இருந்தாலும் மிடில் ஓவர்களில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி சின்னாப்பின்னமானது. அதிலும் குறிப்பாக வருண் சக்ரவர்த்தியின் 2வது ஸ்பெல் நியூசிலாந்து தோல்விக்கு தள்ளியது எனலாம். மிடில் ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர் (ஷமி) ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசினார். அந்தளவிற்கு ஆடுகளம் மெதுவாக இருந்ததால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பான லைன் மற்றும் லெந்தில் வீசி பெரியளவிற்கு ரன்களை தாரைவார்க்கவில்லை. 

7வது ஓவரில் பந்துவீச வந்த அக்சர் பட்டேல், அவரது முதல் ஸ்பெல்லில் தொடர்ந்து 8 ஓவர்களை வீசினார். அதற்கு அடுத்த வந்த வருண் சக்ரவர்த்தி அவரது முதல் ஸ்பெல்லில் (5 ஓவர்கள்) வில் யங் விக்கெட்டை மட்டும் எடுத்தார். அதன்பின் அட்டாக்கிற்கு வந்தார் குல்தீப் யாதவ். டேரில் மிட்செல் வருணுக்கு திணறிவந்த நிலையில், குல்தீப் யாதவை அவர் சர்வசாதாரணமாக அடிப்பார் என கூறப்பட்டது. காரணம், கடந்த 2023 உலகக் கோப்பையில் தரம்சாலா மற்றும் மும்பை போட்டிகளில் குல்தீப் யாதவை மிட்செல் சிறப்பாக விளையாடியிருந்தார்.

IND vs NZ: வருண் சக்ரவர்த்தியின் அட்டாக்

ஆனால், இந்த போட்டியில் வருண் கொடுத்த கூடுதல் அழுத்தத்தில் குல்தீப் யாதவின் கூக்ளியை சரியாக கணிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து சென்றார். தொடர்ந்து வந்த டாம் லதாமை ஜடேஜா எளிதாக தூக்கினார். இதற்கிடையே தூணாக நின்று வில்லியம்சன் அரைசதம் கடந்தார். கிளென் பிலிப்ஸ் உள்ளே வந்து செட்டிலாக வருண் சக்ரவர்த்தி அவரது அடுத்த ஸ்பெல்லை தொடங்கினார். 36வது ஓவரின் 3வது பந்து: பிலிப்ஸ் வருணின் ஷார்ட் பிட்ச் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட, அடுத்த பந்தே ஃபுல் லெந்தில் போட்ட பாலை சுத்தமாக கணிக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

IND vs NZ: நியூசிலாந்தை நசுக்கிய வருண் சக்ரவர்த்தி

பிரெஸ்வெல்லை வருண் சக்ரவர்த்தி தூக்க, வில்லியம்சன் பொறுமையிழந்து அக்சர் பட்டேலிடம் வீழ்ந்தார். வருண் சக்ரவர்த்தியும் அவரது கடைசி ஓவரில் சான்ட்னரையும், ஹென்றியையும் தூக்க முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி விக்கெட்டாக வில்லியம் ஓ ரூர்க்கை குல்தீப் யாதவ் தூக்கி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குரூப் ஏ-வில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

IND vs NZ: அரையிறுதியில் யார் யார் மோதல்?

இதன்மூலம், முதல் அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுதினம் (மார்ச் 4) துபாயில் மோதுகின்றன. மார்ச் 5ஆம் தேதி லாகூரில் 2வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும். ஒருவேளை, அரையிறுதியில் வென்று இந்தியா இறுதிப்போட்டிக்கு சென்றால், அந்த போட்டி துபாயில் நடைபெறும். இல்லையெனில், லாகூரில் நடைபெறும்.

மேலும் படிக்க | பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - இன்சமாம் உல் ஹக்

மேலும் படிக்க | ரோகித் சர்மாவின் பிரம்மாஸ்திரம்! இவர் சிறப்பாக ஆடினால் இந்தியா வெற்றி

மேலும் படிக்க | IPL 2025: ரன்மழை பொழியும் கருண் நாயர்... ஐபிஎல் தொடரில் எந்த அணியில் உள்ளார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News