IND vs PAK: 'தோத்துகிட்டே இருக்கீங்ளே...' மீண்டும் டாஸ் தோற்ற ரோஹித் - தனி 'சாதனை'

IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் எதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா டாஸை தோற்றதன் மூலம், டாஸ் தோற்பதில் அவர் தனி சாதனையை பதிவு செய்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 23, 2025, 03:20 PM IST
  • டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு
  • இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவில்லை.
  • பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே.
IND vs PAK: 'தோத்துகிட்டே இருக்கீங்ளே...' மீண்டும் டாஸ் தோற்ற ரோஹித் - தனி 'சாதனை'

IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (ICC Champions Trophy 2025) பாகிஸ்தான் எதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா (Rohit Sharma) டாஸை தோற்றதன் மூலம், டாஸ் தோற்பதில் அவர் தனி சாதனையை பதிவு செய்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

இன்றைய போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும், ஆடுகளம் நேரம் போக போக மெதுவாகும் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். ஆனால், நாங்கள் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என ரோஹித் சர்மா கூறியிருந்தார். எனவே, ஏறத்தாழ டாஸ் தோற்றாலும் இந்திய அணிக்கு பாதகம் இல்லை எனலாம்.

IND vs PAK: ரோஹித் சர்மா தனி சாதனை

ஆனால், அது ரோஹித் சர்மாவுக்கு பாதகமாக முடிந்துள்ளது. ஆம், இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய கடைசி 12 போட்டிகளில் (இன்றைய போட்டி உள்பட) டாஸை தோற்றுள்ளது. ரோஹித் சர்மா ஓடிஐயில் கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸை வென்றிருந்தார். உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இருந்து இன்றைய போட்டி வரை தொடர்ந்து 12 முறை இந்தியா டாஸில் தோல்வியடைந்துள்ளது.

இதன்மூலம் ரோஹித் சர்மாவால் இந்திய அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஒருநாள் அரங்கில் தொடர்ந்து அதிக முறை டாஸை தோற்ற அணியாக நெதர்லாந்து அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. இதற்கு முன், நெதர்லாந்து அணி ஒருநாள் அரங்கில் 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 11 டாஸ்களை தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

IND vs PAK: முகமது ஷமி காயம்?, பாபர் அசாம் அவுட்!

தற்போது இந்திய அணி முதலில் பந்துவீசி வரும் நிலையில், முகமது ஷமி காலில் ஏற்பட்ட சிறு அசௌகரியம் காரணமாக 3 ஓவர்களை மட்டும் வீசிவிட்டு பெவிலியன் திரும்பி உள்ளார். அவர் மீண்டும் பந்துவீச வருவாரா இல்லையா என்பது பெரிய கேள்வியாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டிருப்பது சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இருப்பினும், ஒரு சில ஓவர்களுக்கு பின்னர் ஷமி களத்திற்குள் வந்தது நற்செய்தி எனலாம். அவர் களத்திற்குள் வந்த உடன், ஹர்திக் வீசிய 9வது ஓவரில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 23(26) ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs PAK: இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் இன்று மாற்றமே செய்யவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடனே களமிறங்கியிருப்பதன் மூலம் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணாவின், ரோஹித் சர்மா - கௌதம் கம்பீர் கூட்டணி வைத்திருக்கும் நம்பிக்கையை புரிந்துகொள்ள முடிகிறது. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் மட்டுமே நடந்துள்ளது. காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ஃபக்கர் சமானுக்கு பதில் இமாம் உல்-ஹக் இன்று விளையாடி வருகிறார்.

மேலும் படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியல்!

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. புது ரெக்கார்டு செய்ய காத்திருக்கும் விராட் கோலி.. இதை செய்தால் போதும்!

மேலும் படிக்க | பாகிஸ்தானில் "இந்திய தேசிய கீதம்".. ஷாக் ஆன ஆஸி வீரர்கள்.. லாகூரில் நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News