IND vs SA 2nd T20I Playing XI Updates: தென்னாப்பிரிக்கா அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது டி20ஐ தொடர் தொடங்கியிருக்கிறது.
IND vs SA 2nd T20I: இந்திய அணி வெற்றி
ஐசிசி டி20ஐ உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற இருக்கும் சூழலில், இரு அணிகளுக்கும் இந்த டி20ஐ தொடர் முக்கியத்துவம் வாயந்ததாகும். அந்த வகையில் நேற்று (டிசம்பர் 9) நடைபெற்ற முதல் டி20ஐ போட்டியை இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
IND vs SA 2nd T20I: நேரலையில் எப்படி பார்ப்பது?
இரண்டாவது டி20ஐ போட்டி நாளை (டிசம்பர் 11) நியூ சண்டிகர் முல்லான்பூர் நகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனல்களிலும் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் காணலாம்.
IND vs SA 2nd T20I: இந்த 4 வீரர்களுக்கு ஓய்வு
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அதிகளவில் உற்றுநோக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாடினர். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே ஆகிய இருவருமே நேற்று விளையாடினர். பின்வரிசையில் ஜித்தேஷ் சர்மா விளையாடினார்.
IND vs SA 2nd T20I: சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பிருக்கா?
இதுவே, 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியின் பிரதான பிளேயிங் லெவனாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. சுப்மான் கில்லின் மோசமான ஃபார்ம் நேற்றும் தொடர்ந்தது. ஒருவேளை, அடுத்த நியூசிலாந்து டி20ஐ தொடரிலும் சுப்மான் கில்லின் இந்த மோசமான பார்ம் தொடர்ந்தால் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அர்ஷ்தீப் சிங் விளையாடுவதால் குல்தீப் யாதவிற்கான இடம் கிடைக்கவில்லை. இரு பிரீமியம் ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவது கடினம் என்பதால் பும்ரா - அர்ஷ்தீப் சிங் ஜோடியை, கௌதம் கம்பீர் - சூர்யகுமார் யாதவ் ஜோடி தேர்வு செய்துள்ளது.
IND vs SA 2nd T20I: வாஷிங்டன் சுந்தர் vs அக்சர் பட்டேல்
இதில் இந்திய அணி செய்ய வேண்டிய ஒரே மாற்றம் அக்சர் பட்டேலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை கொண்டுவரலாம். அக்சர் பட்டேல் நேற்று 2 ஓவர்களை வீசி வெறும் 7 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். பேட்டிங்கில் 21 ரன்களில் 23 ரன்களை அடித்திருந்தார். அதுவும் இவர் நம்பர் 5இல் களமிறக்கப்பட்டார். இதுதான் பிரச்னை. ஒருவேளை, வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டால் அவரை நீங்கள் நம்பர் 7 அல்லது 8இல் விளையாட வைக்கலாம். இதனால், ஹர்திக் பாண்டியா நம்பர் 5, சிவம் தூபே நம்பர் 6 விளையாட வைக்கலாம். தேவையை பொருத்து நம்பர் 7 வாஷிங்டன் சுந்தரையோ அல்லது ஜித்தேஷ் சர்மாவையோ களமிறக்கலாம். பேட்டிங் ஆர்டரும் அதேபோல் நீண்டிருக்கும், ஹர்திக் போன்றோருக்கு செட்டிலாக இன்னும் நேரமும் கிடைக்கும்.
பந்துவீச்சில் பலம் குறையுமே என நீங்கள் கேட்கலாம். ஒருவேளை எதிர் அணியில் இடதுகை பேட்டர்கள் அதிகம் இருக்கும்பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் உங்களுக்கு உதவலாம். மேலும், அக்சர் பட்டேல் பவர்பிளேவில் ஒரு ஓவரை வீசும் இடத்தில் நீங்கள் வாஷிங்டன் சுந்தரிடம் இருந்து இரண்டு ஓவர்களை வாங்கலாம். மிடில் ஓவர்கள் அவர் வீச வேண்டிய தேவை இருக்காது. பேட்டிங் திறனை ஒப்பிடும்போது அக்சர் பட்டேலை விட வாஷிங்டன் சுந்தரிடம் அதிக ஷாட்கள் இருக்கிறது. ஆனால், அனுபவமும், அழுத்தத்தை கையாளும் திறனும் அக்சர் பட்டேலிடம் அதிகம் என்பதால் அவருக்கு முதன்மையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
IND vs SA 2nd T20I: 2வது போட்டியில் பிளேயிங் லெவன் மாற்றம்
முதல் போட்டியை இந்தியா வென்றிருப்பதால், பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய தேவையில்லை என அனைவரும் நினைப்பார்கள். கம்பீர் - சூர்யகுமார் ஜோடி கூட அதையே செய்ய நினைக்கும். ஆனால், நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து உடனடியாக அக்சர் பட்டேல் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை முயற்சித்து பார்க்க வேண்டும். மீதம் இருக்கும் நான்கு போட்டிகளில் குறைந்தபட்சம் 2 போட்டிகளிலாவது வாஷிங்டன் சுந்தர் விளையாடினால் இந்திய அணிக்கு அந்த தெளிவு கிடைக்கும். எனவே, நாளை நடைபெறும் 2வது போட்டியிலேயே இதை முயற்சிக்க வேண்டும்.
மேலும் படிக்க | IND vs SA Result: ஹர்திக் பாண்டியாவின் அதிரடி! இனி இந்த வீரருக்கு வாய்ப்பு இல்லை!
மேலும் படிக்க | கோலிக்கு இடத்தில் இவரா? பிசிசிஐ கூட்டத்தில் பேசிய கம்பீர் - முக்கிய தகவல்!
மேலும் படிக்க | IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









