இந்திய அணியில் இனி இவருக்கு நிரந்தர இடம்... வெளியேறும் நிதிஷ் குமார் ரெட்டி!

IND vs SA: இந்திய டெஸ்ட் அணியில் அடுத்தடுத்து ரன்களை குவித்து வரும் இந்த வீரருக்கு நிரந்தர இடம் கிடைக்கும். இவரால் வேறு வீரருக்கு வாய்ப்பில்லை...!

Written by - Sudharsan G | Last Updated : Nov 8, 2025, 05:11 PM IST
  • வரும் நவ. 14இல் டெஸ்ட் போட்டி தொடக்கம்
  • மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
  • ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் வருவது உறுதி
இந்திய அணியில் இனி இவருக்கு நிரந்தர இடம்... வெளியேறும் நிதிஷ் குமார் ரெட்டி!

India National Cricket Team: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இன்றோடு நிறைவடைகிறது. நாடு திரும்பும் இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. 2 டெஸ்ட், 3 ஓடிஐ, 5 டி20ஐ என நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் எனலாம்.

Add Zee News as a Preferred Source

IND vs SA: இந்திய ஸ்குவாடில் சிறு மாற்றம்

தற்போதைய சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்குவாடை மட்டும் இந்திய அணி அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் தொடங்கும் நிலையில், வரும் நவம்பர் 22ஆம் தேதி 2வது டெஸ்ட் கௌகாத்தியில் தொடங்கும். முதல் டெஸ்ட் போட்டி நிறைவடையும் தருவாயில் இந்திய ஓடிஐ ஸ்குவாட் அறிவிக்கப்படலாம்.

இந்திய டெஸ்ட் அணியை பொருத்தவரை துணை கேப்டனான ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இடம்பிடித்துள்ளார். அடுத்து பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் ஆகாஷ் தீப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்களை தவிர கடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் ஸ்குவாடில் மாற்றம் ஏதும் இல்லை. ரிஷப் பண்ட் நேரடியாக பிளேயிங் லெவனுக்குள் வருவார். ஆகாஷ் தீப்பிற்கு இடம் கிடைப்பது கடினம். 

IND vs SA: துருவ் ஜூரேல் vs நிதிஷ் குமார் ரெட்டி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளின் பிளேயிங் லெவனை பார்த்தோமானால் ஜெய்ஸ்வால், ராகுல், சுதர்சன், கில், ஜூரேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடினர். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரே ஒரு மாற்றம் நடக்க உள்ளது. அதாவது, ரிஷப் பண்ட் உள்ளே வருவார் என்றாலும் துருவ் ஜூரேல் வெளியேறுவாரா, நிதிஷ் குமார் ரெட்டி வெளியேறுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.  தற்போதைய பார்மை பார்க்கும்போது துருவ் ஜூரேல் அணியில் தொடர்வார் என தெரிய வருகிறது. இதனால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

IND vs SA: நிதிஷ் குமார் ரெட்டி தேவையில்லை

நிதிஷ் குமார் ரெட்டி கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக அணியில் தொடர்வது நல்லதுதான் என கூறினாலும், 5 பந்துவீச்சாளர்கள் இந்திய சூழலுக்கு போதும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மணிக்கு 120-125 கி.மீ., வேகத்தில்தான் வீசிகிறார் என்பதால் அவரின் பந்துவீச்சு தேவை மிகக் குறைவாக உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 போட்டிகளையும் சேர்த்து 4 ஓவர்கள் மட்டுமே அவர் வீசியிருக்கிறார். அடிக்கடி காயத்திலும் சிக்கிக் கொள்வதால் அவர் பேட்டராக அதிக ரன்கள் அடித்தால் மட்டுமே அணியில் தொடர இயலும்.

IND vs SA: ரன்களை குவிக்கும் துருவ் ஜூரேல்

மறுபுறம், துருவ் ஜூரேல் சதங்களை குவித்து வருகிறார். கடந்த மே மாதம் இங்கிலாந்தில் நடந்த இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் போட்டியிலும் அதிகபட்சமாக 94 ரன்களை அடித்திருந்தார், மேலும் ஒரு அரைசத்தை பதிவு செய்திருந்தார். இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்டில் பெரியளவில் பங்களிப்பு அளிக்கவில்லை. அதேநேரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 140 ரன்களை குவித்தார். 

மேற்கு இந்திய தீவுகள் தொடரின் முதல் போட்டியிலே 125 ரன்களை குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்தியா ஏ - தென்னப்பிரிக்கா ஏ அணிகளுக்கு  இடையிலான 2வது அதிகாரப்பூர்வமற்ற போட்டியில் தற்போது அடுத்தடுத்து ஜூரேல் இரண்டு சதம் அடித்து மிரட்டியிருக்கிறார். ஜூரேல் முதல் இன்னிங்ஸில் 132 நாட்அவுட், 2வது இன்னிங்ஸ்லில் 127 ரன்களுக்கு நாட்அவுட் ஆகி உள்ளார். இப்படி தொடர்ந்து ரன்களை குவித்து வரும் அவரை பிளேயிங் லெவனில் புறக்கணிப்பது தவறாகும். 

IND vs SA: துருவ் ஜூரேலுக்கு நிரந்தர இடம்

ஒரே அணியில் 2 விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும் அது பெரிய பிரச்னையாக இருக்காது. 5 பீரிமியர் பந்துவீச்சாளர்களாக பும்ரா, சிராஜ், குல்தீப், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருப்பதால் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டி தேவையில்லை. துருவ் ஜூரேல் கூடுதல் பேட்டராக நம்பர் 6 இடத்தில் விளையாடலாம்.

மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்காக இந்த 3 வீரர்களை விட்டுக்கொடுக்க தயாராகும் சிஎஸ்கே?

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் 5 பேர்! மீண்டும் முக்கிய வீரரை எடுக்கும் சிஎஸ்கே?

மேலும் படிக்க | பிறந்த நாளான இன்று கழட்டிவிடப்பட்ட திலக் வர்மா... அவரின் சொத்து விவரம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News