)
India vs South Africa 1st Test Playing XI Prediction: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு (IND vs SA Test Series) இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் நாளை (நவ. 14) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா நகரின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி சுமார் 6 ஆண்டுகளுக்கு பின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. கடந்த 2019இல் இங்கு இந்திய அணி, பிங்க் பால் டெஸ்ட் போட்டியை வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி அதில் வென்றிருந்தது. ரெட் பால் போட்டி என எடுத்துக்கொண்டால் இந்திய அணி கடைசியாக 2017இல் இலங்கைக்கு எதிராக இங்கு மோதியது. அந்த போட்டி டிராவில் முடிந்தது. தென்னாப்பிரிக்கா அணியும் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கிறது.
தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என திடமான அணியாக தோற்றமளிக்கிறது. கடந்த மாதம்தான் பாகிஸ்தான் மண்ணில், அந்த அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது தென்னாப்பிரிக்கா அணி. கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 0-3 என்ற அளவில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, அதில் இருந்து பாடம் கற்று இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில், முதல் டெஸ்ட்டை பொருத்தவரை ஆட்டச் சூழலுக்கு ஏற்ற வகையில் காம்பினேஷனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில், கம்பீர் - கில் ஜோடி உள்ளது.
Different threads, sa #TeamIndia all geared up for the red-ball challenge against So @IDFCFIRSTBank | #INDvSA pic.twitter.com/RjqAYguOCF
— BCCI (@BCCI) November 12, 2025
ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை முதல் போட்டியின் ஸ்குவாடில் இருந்து இந்திய அணி நேற்று விடுவித்திருக்கிறது. உடற்தகுதியுடன் இருக்கும் அவர் இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ இடையே இன்று தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ராஜ்கோட்டில் நடைபெற இருக்கின்றன. நவ. 19ஆம் தேதி இந்த தொடர் நிறைவடையும் என்பதால் நிதிஷ் குமார் ரெட்டி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கௌகாத்தியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் ஸ்குவாடில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி நவ. 22இல் தொடங்கும்.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரேல் விளையாடுவது 99% உறுதியாகி உள்ளது. அவர் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது மட்டுமின்றி, கடைசி மூன்று முதல் தர போட்டிகளை பொருத்தவரை 5 இன்னிங்ஸில் 3 சதங்களையும் அடித்திருக்கிறார். சமீபத்தில், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து கவனம் ஈர்ததார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பதால் அவரை இந்திய அணி நிச்சயம் பயன்படுத்தும் என தெரிகிறது. நிதிஷ் குமார் பந்துவீச்சில் பெரியளவுக்கு கைக்கொடுக்கவில்லை என்பதால் அவருக்கு பேட்டருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதேநேரத்தில், ஈடன் கார்டன்ஸ் வழக்கமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் இங்கு வேகப்பந்துவீச்சாளர்களே தங்களின் ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறார்கள். 15 ஆண்டுகளில் 6 ரெட் பால் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர்களே 61% விக்கெட்டை சரித்துள்ளனர். அதாவது, 97 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த போட்டிக்கு வழங்கப்பட இருக்கும் கருப்பு மண் ஆடுகளத்தை பார்க்கும்போது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு அதிகளவு ஏற்ற சூழல் இருப்பதால் அதை பயன்படுத்திக்கொள்ளும் பந்துவீச்சாளர்களை இரு அணிகளும் தங்களின் பிளேயிங் லெவனில் வைக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பும்ரா பந்து தேய்மானம் அடைந்ததும் அதை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்தது. அதேநேரத்தில், Seam Presentation-ல் வல்லவராக அறியப்படும் ஆகாஷ் தீப்பை இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்றும் குரல்கள் எழுகின்றன. மேலும் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அதிகளவில் உள்நாட்டு போட்டிகளில் விளையாடிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. வானிலை நிலவரத்தை பொருத்தவரை போட்டி நேரத்தில் காலையிலும், மாலையிலும் மேகமூட்டமாக இருக்கும் என்பதால், பந்தும் நன்கு ஸ்வீங்காகும். இதற்கும் கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர் தேவை இருக்கிறது.
இதுமட்டுமின்றி, ஆடுகளம் தேய்மானம் அடைந்து 5வது நாளிலேயே அதிகளவு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதற்கு குல்தீப் யாதவ்தான் வேண்டும் என்பதில்லை. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருக்கிறார்கள், அதுவே போதுமானது. இன்னும் நீண்ட பேட்டிங் ஆர்டர் வேண்டுமென்றால் ஆகாஷ் தீப்புக்கு பதில் அக்சர் பட்டேலை சேர்க்கலாம். ஆனால் குல்தீப் யாதவுக்கான வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது. போட்டியின் முதல் அன்று ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து பிளேயிங் லெவனில் கம்பீர் - கில் ஜோடி மாற்றத்தை கொண்டுவரலாம்.
கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்/ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ