Shubman Gill Test Runs As Captain: சுப்மன் கில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் அந்த தொடரில் ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டார். ஒரு இரட்டை சதம் மற்றும் 2 சதங்களையும் விளாசி ரன்களை குவித்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் இப்போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். இந்த சூழலில், இன்று (அக்டோபர் 10) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி உள்ளது. இப்போட்டியில் சுப்மன் கில் இமாலய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
அதாவது சுப்மன் கில், சுனில் கவாஸ்கரின் ஒவ்வொரு சாதனையையும் தொடர்ந்து முறியடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சுப்மன் கில் சுனில் கவாஸ்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் வைத்துள்ளார். இதனை அவர் 15வது இன்னிங்ஸில் எட்டினார். ஆனால் தற்போது 1000 ரன்களை மிக வேகமால நெருங்கி வருகிறார் தற்போதைய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.
இதுவரை கேப்டனாக 11 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள சுப்மன் கில் 804 ரன்களை குவித்திருக்கிறார். இன்னும் 196 ரன்களை 15 இன்னிங்ஸ்க்குள் அவர் எட்டிவிட்டால், அது இமாலய சாதனையாக மாறும். இதன் மூலம் சுப்மன் கில், சுனில் கவாஸ்கரின் 45 ஆண்டுகால சாதனையை முறியடித்து 1000 ரன்களை அதிவேகமாக எட்டிய புதிய கேப்டனாக வரலாற்று சாதனை படைப்பார்.
இந்த சாதனையை அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறியடிப்பாரா அல்லது இதையடுத்து நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில் இந்த சாதனையை நிகழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சுப்மன் கில் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் 2,697 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் 8 அரைசதங்களும் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 41.49ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ போட்ட கண்டிஷன்
மேலும் படிக்க: குஷியில் கில்... டாஸ் ஜெயித்ததும் முகத்தில் சந்தோஷத்தை பாருங்க - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









