இந்தியா A vs இங்கிலாந்து லயன்ஸ் 2வது பயிற்சி டெஸ்ட்: லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்..!!

India A vs England Lions live streaming : இந்தியா ஏ - இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அங்கீகரிக்கப்படாத பயிற்சி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. அதனை எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 6, 2025, 02:30 PM IST
  • இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம்
  • 2வது அங்கீகரிக்கப்படாத டெஸ்ட் போட்டி இன்று
  • இப்போட்டியை நேரலையாக பார்ப்பது எப்படி?
இந்தியா A vs இங்கிலாந்து லயன்ஸ் 2வது பயிற்சி டெஸ்ட்: லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்..!!

India A vs England Lions live streaming : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்தியா A மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே அங்கீகரிக்கப்படாத பயிற்சி டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் ஜூன் 6 ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. ஜூன் 9 வரை நடக்கும் இப்போட்டி கவுண்டி கிரவுண்ட், நார்தாம்ப்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியை இந்தியாவில் எப்படி பார்க்கலாம் என்பதற்கான முழு விவரங்கள் இங்கே பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

போட்டியின் நேரம் மற்றும் இடம்

தேதி: ஜூன் 6 - 9, 2025, நேரம்: மதியம் 3:30 மணி (IST), இடம்: கவுண்டி கிரவுண்ட், நார்தாம்ப்டன்.

லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் டெலிகாஸ்ட்

டிவியில் ஒளிபரப்பு: இல்லை. இந்தியாவில் இந்த போட்டி டிவியில் ஒளிபரப்பப்படாது.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ECB வலைத்தளம் மற்றும் செயலி மூலம் இலவசமாக பார்க்கலாம். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு சொந்தமான வலைதளம் ஆகும். இதுதவிர ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்கலாம். ESPNcricinfo, Cricbuzz போன்ற தளங்களில் ஸ்கோர் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தியா A அணி

கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன். முக்கிய வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், கருண் நாயர், KL ராகுல், ஷர்துல் தாகூர், முகேஷ் குமார். 

இங்கிலாந்து லயன்ஸ் அணி

கேப்டன் ஜேம்ஸ் ரூ. முக்கிய வீரர்கள்: கிரிஸ் வோக்ஸ், ரேஹான் அஹ்மத், டாம் ஹெய்ன்ஸ், ஜோர்டன் காக்ஸ்.

2வது போட்டி அப்டேட்

முதல் போட்டி சமனில் முடிந்தது. இப்போட்டியில் இந்திய வீரர் கருன் நாயர் 204 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பேட்டிங்கில் யஷஸ்வி, சர்ப்ராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், கருண் நாயர், கேஎல் ராகுல் நம்பிக்கை கொடுக்கின்றனர். பந்துவீச்சில் முகேஷ் குமார், அகாஷ் தீப் ஆகியோர் இங்கிலாந்து பேட்டர்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சின்னசாமி துயர சம்பவத்துக்கு விராட் கோலியின் ரியாக்ஷன் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

மேலும் படிக்க | ஆர்சிபி அணி மீது விசாரணை.. முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சர்ச்சை!

மேலும் படிக்க | ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்: 11 பேர் பலி; 27 பேர் படுகாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News