இந்த CSK சிங்கத்திற்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? - ஆடிப்போன இங்கிலாந்து லயன்ஸ்!

India A vs England Lions: இங்கிலாந்து லயன்ஸ் அணியின் மிடில் ஆர்டரை சரித்த இந்திய ஏ அணியில் விளையாடும் சிஎஸ்கே சிங்கத்திற்கு பிரதான இந்திய அணியில் இடம் கிடைக்குமா...?

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2025, 12:00 AM IST
  • இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதல்.
  • 2வது போட்டியில் இந்தியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
  • இன்று 3ம் நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த CSK சிங்கத்திற்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? - ஆடிப்போன இங்கிலாந்து லயன்ஸ்!

India A vs England Lions: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி தற்போது சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை 5 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதுகின்றன.

Add Zee News as a Preferred Source

India A: 3 போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணி

இந்திய சீனியர் அணி விளையாடுவதற்கு முன்னரே, இந்திய ஏ அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தொடர்ந்து அடுத்து, வரும் ஜூன் 13ஆம் தேதி இந்திய அணிக்கும், இந்தியா ஏ அணிக்கு இடையே பயிற்சி போட்டி ஒன்றும் நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளும் தலா 4 நாள்கள் மட்டுமே நடைபெறும். அந்த வகையில், முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 

India A vs England Lions: பரபரப்பான 2வது போட்டி

தற்போது இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நார்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து, இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களை குவித்தது. இரண்டாம் நாளான நேற்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 192 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் இருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

India A vs England Lions: இந்தியா ஏ முன்னிலை

மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து லயன்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. இன்று மட்டும் 43 ஓவர்கள் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி மீதம் உள்ள 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 135 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் 21 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ஏ அணி அதன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கி உள்ளது. 

India A vs England Lions: சதத்தை நோக்கி அபிமன்யூ ஈஸ்வரன்

தற்போது ஜெய்ஸ்வால் 5, கேஎல் ராகுல் 51, கருண் நாயர் 15 ரன்களுடன் ஆட்டமிழக்க, துருவ் ஜூரேல் உடன் அபிமன்யூ ஈஸ்வரன் அரைசதம் அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார். இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது வரை 30 ஓவர்களில் 145 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய ஏ அணி தற்போது 166 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இன்று இன்னும் 20 ஓவர்கள் வீசப்பட உள்ள நிலையில், நாளை முழு நாளும் உள்ளது. இதனால் இந்திய ஏ அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.

India A vs England Lions: கலீல் அகமது மிரட்டல் பந்துவீச்சு

இந்திய ஏ அணி நிச்சயம் அதன் கடைசி விக்கெட் வரை போராடும். இது ஒருபுறம் இருக்க, 192/3 என வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து லயன்ஸை சரித்தது யார் என நீங்கள் கேட்டால் அது வெறும் யாருமில்லை இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அகமதுதான். 50 ஓவர்கள் பழைய பந்தை கையில் வைத்து கலீல் அகமது ரிவர்ஸ் ஸ்விங்கில் வித்தை காட்டினார். இதனால், 51வது ஓவரில் ஒரு விக்கெட், 55வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட், 57வது ஓவரில் ஒரு விக்கெட் என இங்கிலாந்து லயன்ஸின் மிடில் ஆர்டரை சரித்தார்.

Kaleel Ahmed: இந்திய அணியில் இடம் கிடைக்குமா? 

இவர் புதிய பந்தில் வித்தைக்காட்டாவிட்டாலும் பழைய பந்தில் சிறப்பாக வீசியது இந்திய அணிக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. கலீல் அகமது இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், ஹர்ஷ்தீப் சிங்கிற்கோ அல்லது வேறு வேகப்பந்துவீச்சாளருக்கோ காயம் அடைந்தால் மாற்று வீரராக இவரை எடுக்கலாம். மேலும், நீண்ட தொடர் என்பதால் பல மாறுதல்கள் இருக்கும். ஒருவேளை ஹர்ஷ்தீப் சிங் பெரியளவில் வித்தைக்காட்டவில்லை என்றால் உடனே கலீல் அகமதிற்கு வாய்ப்பு கிடைக்கலாம். சிஎஸ்கேவின் பவர்பிளே சிங்கத்திற்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும் படிக்க |  'அவருக்கு ஈடாக பந்துவீச்சாளர்கள் இருக்காங்க' பும்ராவை ஓரங்கட்ட தொடங்கிய கவுதம் கம்பீர்..!

மேலும் படிக்க | இங்கிலாந்து தொடரில் இந்த 3 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்! யார் யார் தெரியுமா?

மேலும் படிக்க | ஜெய்ஸ்வால் உடன் ஓப்பனிங்கில் இவர் தான் இறங்குவார்... சாய் சுதர்சன் கிடையாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News