Anderson Sachin Trophy: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 20) லீட்ஸ்ஸின் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி உள்ளது. மதியம் 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டது. டாஸை இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 3.30 மணிக்கு தொடங்கிய நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவருமே நிதானமாக ஆடி வந்தனர். இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களால் இவர்களை அவுட் செய்ய முடியவில்லை. பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினர். 5.30 மணிக்கு முதல் செஷன் முடிவதற்கு சற்று முன்னால் தான் கே. எல். ராகுல் ஆட்டமிழந்தார். அவரை பிரைடன் கார்ஸ் அவுட் ஆக்கினார். ராகுல் 78 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஜெய்ஸ்வால், கில் சதம்
அவரை தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் டக் ஆக, கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார். இந்த கூட்டணியும் 100 ரன்களை எட்ட, ஜெய்ஸ்வாலும் 100 ரன்களை அடித்தார். ஆனால் அதன்பின் ஆட்டமிழந்தார். 159 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலுக்கு 5வது சதம் ஆகும். இதையடுத்து ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். அவர் பொருமையாக இங்கிலாந்து அணியை கையாண்டார். அவ்வபோது, அவரது பாணியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் அரைசதம் கடந்து சதத்தையும் எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 6வது சதம் ஆகும். டெஸ்ட் அணியின் கேப்டனாக முதல் சதம் ஆகும். ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர் என்பதால், எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தன. தற்போது வரை எதிர்ப்பார்த்த படி இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
வலுவான நிலையில் இந்திய அணி
ரிஷப் பண்ட் - சுப்மன் கில் கூட்டணியும் 100 ரன்களை தாண்டியுள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால், விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. ரிஷப் பண்ட் தனது 16வது அரைசதத்தை விளாசி, 102 பந்துகளில் 65 ரன்களுடன் களத்தில் நிலைத்து நிற்கிறார். மறுபுறம் சுப்மன் கில் 175 பந்துகளில் 127 ரன்களுடன் உள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 359 ரன்களை விளாசி வலுவான நிலையில் உள்ளது.
மேலும் படிங்க: டெஸ்ட் அறிமுக போட்டியில் டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ