India Test Record Under Gautam Gambhir: இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இன்று முதல் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இழந்துள்ளது. இது கெளதம் கம்பீருக்கு மேலும் ஒரு அடியாக பார்க்கப்படுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை முடிந்த பின்னர் கெளதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதன் பின் இந்திய அணி டி20 போட்டிகளில் சிறப்பாகவும் ஒருநாள் போட்டிகளில் ஓரளவும் செயல்பட்டு வந்தன. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக விளையாடி அதளபாதாளத்தில் உள்ளது.
இன்றைய தென்னாப்பிரிக்கா போட்டியை சேர்த்து கெளதம் கம்பீர் பயிற்சியில் இந்திய அணி மொத்தமாக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி படுதோல்விகளையே அடைந்துள்ளன. இவர்களுக்கு எதிராக ஒரு தொடரை கூட கைப்பற்றவில்லை.
Gautam Gambhir: வங்கதேசத்திற்கு எதிரான தொடர்
கடந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்திலும் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது.
Gautam Gambhir: இந்தியா vs நியூசிலாந்து
இதையடுத்து 2024ஆம் ஆண்டு நவம்பரில் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது இந்திய அணி. பெங்களூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பூனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்து தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டது. மும்பை வான்கடே நடைபெற்ற இறுதி போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
Gautam Gambhir: இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இம்முறை இந்திய அணி ஒரு போட்டியில் வென்றும் ஒரு போட்டியை டிராவும் செய்தது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் என்ற வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால் இத்தொடரை இந்திய கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்தை கொடுத்தது.
அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து பிரிஸ்பைன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
Gautam Gambhir: இந்தியா vs இங்கிலாந்து
ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. இத்தொடரை இந்திய அணி டிரா செய்தது. முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் தோல்விகளை சந்தித்தன. பின்னர் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது. நான்காவது போட்டியில் டிராவான நிலையில், கடைசி போட்டியில் இந்திய அணி வென்று தொடரை டிரா செய்தது.
Gautam Gambhir: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
தற்போது தென்னாப்பிரிக்கா எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், இத்தொடரையும் இழந்துள்ளது. இரண்டாவது போட்டியில் வென்று இத்தொடரை டிரா செய்யும் வாய்ப்பு மட்டுமே இந்திய அணியிடம் உள்ளது. கெளதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்து வருவது ரசிகர்கள் இடையே விமர்சனங்களை பெற்று வருகின்றன.
மேலும் படிக்க: ரிஷப் பண்ட் டூ விராட் கோலி: அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்களின் பட்டியல்!
மேலும் படிக்க: ஜடேஜா, சாம் கரன் இல்லை.. 2026 ஐபிஎல்லில் CSK பிளேயிங் 11 என்னவாக இருக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









