நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது சந்தேகம்.. ரிப்போர்ட் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

India vs New Zealand 2nd ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாளை (ஜனவரி 14) இந்திய அணி விளையாட உள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Jan 13, 2026, 05:07 PM IST
  • இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி
  • பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை அறிக்கை
  • முழு விவரம்
நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது சந்தேகம்.. ரிப்போர்ட் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

IND VS NZ 2nd ODI Latest News: இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடைபெற இருக்கிறது. இதில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 11ஆம் தேதி இத்தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. 

Add Zee News as a Preferred Source

IND vs NZ 2nd ODI: நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி 

அப்போட்டி வதோதராவில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நாளை (ஜனவரி 14) நடக்க இருக்கும் இரண்டாவது ஒருநாளை போட்டியையும் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முன்னைப்புடன் உள்ளது. மறுபுறம் நியூசிலாந்து அணி போட்டியை வென்று தொடரை தக்கவைத்துக்கொள்ளவும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவும் தயாராகி வருகிறது. 

4ல் மூன்று போட்டிகள் தோல்வியடைந்த இந்தியா

நாளை நடக்கும் இரண்டாவது போட்டி ராஜ்கோட் நகரில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு போட்டியானது தொடங்குகிறது. இந்த ராஜ்கோட் மைதானத்தில் 28000 பேர் அமரலாம். முன்னதாக இந்திய அணி 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 3 தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

மழை பெய்யுமா? 

நாளைய போட்டியின்போது மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் 13 முதல் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிகிறது. அதனால் போட்டி மழையால் தடைபட வாய்ப்பில்லை. 

பிட்ச் எப்படி?  

ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கிறது. இங்கு நல்ல பவுன்ஸ் இருக்கும். நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடும் பேட்ஸ்மேன்கள் இங்கு நல்ல ரன்களை எடுப்பார்கள். அதேசமயம் பந்து வீச்சாளர்களுக்கும் இந்த மைதானம் சற்று சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இங்கு இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலுமே முதல் பேட்டிங் செய்தவர்கள் 300 ரன்களை கடந்துள்ளனர். அதேபோல் முதல் பேட்டிங் செய்தவர்களே இங்கு வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை நடந்த 4 போட்டிகளும் அப்படியே. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், துருவ் ஜுரேல், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால். 

மேலும் படிக்க: செம ஃபார்மில் CSK வீரர்கள்.. இதுவரை விஜய் ஹசாரே டிராபியில் கலக்கியவர்கள் யார் யார்? முழு விவரம்

மேலும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 10 வீரர்கள்.. விராட் கோலிக்கு எந்த இடம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News