)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸின் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தற்போது 129 ரன்களை எடுத்த நிலையில், 3 விக்கெட்களை இழந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணி இப்போட்டியில் தோல்வியை தழுவ அதிக வாய்ப்புள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
இப்போட்டியின் டாஸை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வென்ற நிலையில், அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியே முதல் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 471 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களையும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் 134 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஓலி போப் 106, ஹாரி புரூக் 99 மற்றும் பென் டக்கெட் 62 ரன்களையும் அடித்தனர். இதன் முலம் இந்திய அணி 6 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணி மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
தடுமாறும் இந்திய அணி
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த மூன்று வீரர்களில் இரண்டு வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளனர். ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் கில் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து உள்ளனர். கடந்த இன்னிங்ஸில் டக் அவுட்டான அறிமுக வீரர் சாய் சுதர்சன் இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்து 159 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் கே.எல். ராகுல் அரைசதம் கடந்து 72 ரன்களுடன் உள்ளார். அவருடன் துணை கேப்டன் ரிஷப் பண்ட் 31 ரன்களுடன் களத்தில் நின்று விளையாடி வருகிறார்.
இந்திய அணி குறைந்தது 300 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்க வேண்டும். அப்படியான ஒரு இலக்கை வைத்தால் மட்டுமே இந்திய அணியால் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியும். அதற்கு களத்தில் நிற்கும் ரிஷப் பண்ட் மற்றும் கே. எல். ராகுல் பெரிய பார்ட்னர்ஷிப்பை பெற வேண்டும். இல்லையென்றால், இந்திய அணியை தோல்வியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். இன்று இந்திய அணி ஆட்டமிழந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தால், அந்த அணிகே வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும்.
டிரா செய்ய என்ன வழி?
ஒருவேளை இந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ய நினைத்தால், இந்திய அணி விக்கெட்களை தக்கவைத்து நாளை முதல் செஷன் வரையிலாவது களத்தில் நிற்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில், இப்போட்டியை டிரா செய்ய வழி கிடைக்கும். ஆனால், அவசரப்பட்டு இன்றே விக்கெட்டை இழந்தால், இங்கிலாந்து அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ