உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. பின்தங்கிய இந்திய அணி.. எத்தனாவது இடம்?

WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jun 28, 2025, 08:24 PM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்
  • இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. பின்தங்கிய இந்திய அணி.. எத்தனாவது இடம்?

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கதேசம் - இலங்கை, ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா - இங்கிலாந்து ஆகிய டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்த சுழற்சியில் விளையாடிய 1 போட்டியில் வெற்றி பெற்றதால், முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியதால், 100 சதவீத வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இதையடுத்து இலங்கை அணி இந்த சுழற்சியில் இரண்டு போட்டிகள் விளையாடி, அதில் 1 போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வியும் ஒருபோட்டி டிராவும் ஆனதால், அந்த அணி 4வது இடத்தில் உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால், அந்த அணிகள் முறையே 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளன. 

மற்ற அணிகளான நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்னும் இந்த 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் விளையாடவில்லை. இதன் காரணமாக அந்த அணி கடைசி மூன்று இடங்களில் உள்ளன. 

இந்திய அணியின் நிலை 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தற்போது இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. வரும் 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் கூட, இந்திய அணியால் முதல் இடத்திற்கு வர முடியாது. ஏன்னென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணியால், முதல் இடத்திற்கு வர முடியாது. 

மேலும் படிங்க: Ind vs Eng: இந்திய அணியில் இருந்து இந்த 2 வீரர்கள் நீக்கம்.. நுழையும் வேகப்பந்து வீச்சாளர்கள்!

மேலும் படிங்க: இங்கிலாந்தை வீழ்த்த கில்லுக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு இந்த பிளேயர் தான் - ரஹானே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News