India vs Australia ODI Series: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது இந்த தொடரின் மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: புர்கா அணிந்து விளையாடினார்களா பங்களாதேஷ் வீரர்கள்? வைரல் வீடியோ!

2027 ஒருநாள் உலக கோப்பை
தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்பில் முதல் படியாக இந்த தொடர் கருதப்படுகிறது. மூத்த வீரர்களின் அனுபவமும், இளம் வீரர்களின் திறமையும் கலந்த ஒரு வலுவான அணியை உருவாக்கும் நோக்கில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. கோலி மற்றும் ரோஹித்தின் வருகை அணிக்கு பெரும் பலத்தையும், ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போட்டி அட்டவணை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19 பெர்த் மைதானத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 23 அடிலெய்டு மைதானத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 25 சிட்னி மைதானத்திலும் நடைபெற உள்ளது.
ஒளிபரப்பு விவரங்கள்
இந்த மூன்று போட்டிகளையும் ரசிகர்கள் ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளம் வழியாக நேரலையில் கண்டுகளிக்கலாம். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் வருகையால், இந்த தொடரின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி நடைபெறும் பெர்த் மைதானத்தில் மொத்த டிக்கெட்களும் விற்பனை ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் வடிவத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்திய அணி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அணிகளின் விவரம்
இந்தியா அணி
சுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், துருவ் ஜுரெல், ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா.
ஆஸ்திரேலியா அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கூப்பர் கானோலி, மாட் ரென்ஷா, மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மிட்செல் ஓவன், சேவியர் பார்ட்லெட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சம்பா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









