டெஸ்டிலும் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும், இந்திய அணி அவரை நம்பியே உள்ளது -சவுரவ் கங்குலி

Sourav Ganguly Reacts On Virat Kohli டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி நிதானமாக விளையாட வேண்டும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு கோஹ்லி மிகவும் முக்கியமானவராக இருப்பார், அதனால் அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 27, 2023, 03:27 PM IST
  • விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற வேண்டும்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் சிறப்பாக செயல்பட வேண்டும் -கங்குலி.
டெஸ்டிலும் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும், இந்திய அணி அவரை நம்பியே உள்ளது -சவுரவ் கங்குலி

India vs Australia: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் அடித்ததன் மூலம் விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இந்தியா அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கிடையில் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி நிதானமாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். சவுரவ் கங்குலியின் கூற்றுப்படி, டெஸ்ட் தொடரில் கோஹ்லியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். விராட் கோஹ்லி தனது ஆட்டத்தை மேம்படுத்தி, டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படத் தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் பிப்ரவரியில் தொடங்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற வேண்டும் என்றால், இந்தத் தொடரில் நிச்சயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவர் கங்குலி, விராட் கோஹ்லி பற்றி கூறுகையில், "விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும், ஏனெனில். இந்திய கிரிக்கெட் அணி அவர்களை நம்பியிருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் விரைவில் வரவுள்ளது. அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த தொடரில் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. இதன் காரணமாக போட்டி மிகவும் கடினமாக இருக்கும். 

மேலும் படிக்க: Australian Open: இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா அதிர்ச்சி தோல்வி; கண்ணீருடன் விடைபெற்றார்

பழைய பார்மிற்கு திரும்பிய விராட் கோலி

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான கோலி தனது பழைய பார்மிற்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு உற்சாகமாக உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சதங்கள் அடித்து அசத்தினார். தற்போது அவர் மீண்டும் டெஸ்ட் தொடரில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கடைசியாக டெஸ்ட் தொடர் நடந்தபோது, ​​அப்போது ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு திரும்பினார் விராட் கோலி. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது. இந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்திய சுற்றுப்பயணத்தை (Australia tour of India, 2023) மேற்கொள்கிறது. இந்தமுறையும் ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க இந்திய அணி தயாராகி வருகிறது. எனவே இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்தசந்தேகமும் இல்லை. அதேபோல இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றியை பொறுத்து தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு முடிவாகும் என்பதால், இந்திய அணியை பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: கேஎல் ராகுலுக்கு கோடிக்கணக்கில் பரிசளித்த கோலி... ஸ்டைலான பைக்கை கொடுத்த தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலியின் பர்பாமன்ஸ்

-- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 34 வயதான கோஹ்லியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.
-- அவர் 20 போட்டிகளில் 36 இன்னிங்ஸ்களில் 48.06 சராசரி மற்றும் 52.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,682 ரன்கள் எடுத்துள்ளார்.
-- அதிகபட்சமாக 169 ரன்கள் அடித்துள்ளார். ஏழு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்துள்ளார். 
-- மூன்று முறை ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

மேலும் படிக்க: 2022இன் சிறந்த டி20 வீரர்... விருதை தட்டிச்சென்ற சூர்யகுமார் யாதவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News