Yashasvi Jaiswal records : இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஷ்வால் சதமடித்து அசத்தியுள்ளார். அவர் இந்த சதம் மூலம் பல கிரிக்கெட் சாதனைகளையும் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் லீட்ஸ் மைதானத்தில் சதமடித்த முதல் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார் ஜெய்ஷ்வால்.
159 பந்துகளை எதிர்கொண்ட அவர் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடித்தார். ஜெய்ஷ்வாலுக்கு இது 5வது சர்வதேச சதமாகும்.கேஎல் ராகுலுடன் ஓப்பனிங் இறங்கி நிதானமாக ஆடினாலும், அவ்வப்போது அதிரடி ஷாட்களையும் அடித்தார். கவர் திசையில் ஜெய்ஷ்வால் சூப்பராக அடித்த சிக்சரை பார்த்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அசந்துபோயினர். 23 வயதே ஆன ஜெய்ஷ்வால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரைப் போல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சதமடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளார். மேலும், 23 வயதில் அதிக சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையிலும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் உள்ளார். 9 சதங்களுடன் ரோகித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார். தலா 5 சதங்களுடன் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜெய்ஷ்வால். இங்கிலாந்து மண்ணில் ஜெய்ஷ்வால் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த அறிமுக போட்டியிலேயே அவர் சதமடித்திருப்பதும் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய பிளேயர்கள் பட்டியலில் இப்போது ஜெய்ஷ்வால் இணைந்திருக்கிறார்.
இதுதவிர இன்னும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் அவர். கேப்டன் சுப்மன் கில்லும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். களத்தில் கில்லுடன் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். லீட்ஸ் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்க முடியும். எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ