இந்திய அணி செய்த பெரிய தப்பு... அதிரடி சதம் அடித்தும் ஸ்குவாடில் இடமில்லை!

India vs India A: இந்தியா - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியின் 2வது நாளான நேற்று நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 15, 2025, 01:28 PM IST
  • பும்ரா விக்கெட்டே எடுக்கவில்லையாம்.
  • சிராஜ் அதிக ரன்களை கொடுத்திருக்கிறார்.
  • ருதுராஜ் கெய்க்வாட் டக்அவுட்டாகி உள்ளார்.
இந்திய அணி செய்த பெரிய தப்பு... அதிரடி சதம் அடித்தும் ஸ்குவாடில் இடமில்லை!

India vs India A Intra Squad Match: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப்போட்டி நேற்றோடு (ஜூன் 14) நிறைவடைந்தது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் 27 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா முதல்முறையாக ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது.

India vs India A: இந்தியா - இந்தியா ஏ பயிற்சி போட்டி

இத்துடன் 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி நிறைவடைந்தது. இனி 2025-27 சுழற்சி தொடங்க இருக்கிறது. இதில் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதுகின்றன. இவர்கள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். சொந்த நாட்டில், சிறப்பான அணியை வீழ்த்தி இந்த டெஸ்ட் சுழற்சியை வெற்றியுடன் தொடங்க பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வெறிகொண்டு காத்திருக்கிறது. 

மறுபுறம் சுப்மான் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி அளிக்க தயாராகி வருகிறது. தற்போது இங்கிலாந்தின் பெக்கன்ஹாமில் உள்ள கென்ட் மைதானத்தில் இந்தியா - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலிரண்டு நாள்கள் பயிற்சி நிறைவடைந்தது. முதல் நாளில் கேஎல் ராகுல், சுப்மான் கில் ஆகியோர் அரைசதம் அடித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஷர்துல் தாக்கூர் விக்கெட்டுகளை சரித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

India vs India A: இரண்டாவது நாளில் நடந்தது என்ன?

தொடர்ந்து, நேற்றைய ஆட்டத்தில் பும்ரா பந்துவீசி உள்ளார். ஆனால் அவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லையாம். ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ஓவருக்கு 5 ரன்களை கொடுத்துள்ளார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் அதிக ரன்களையும் கொடுத்துள்ளார். அதாவது ஒரு ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்துள்ளார். பிரசித் கிருஷ்ணாவும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் இவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். 

India vs India A: ருதுராஜ் கெய்க்வாட் டக்அவுட்

இந்தியா ஏ அணி இரண்டாவது நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களை எடுத்திருக்கிறது. இதன்மூலம், பிரதான இந்திய அணியை விட 160 ரன்கள் பின்தங்கி உள்ளது. நம்பர் இடத்தில் இறங்கிய சாய் சுதர்சன் 60 பந்துகளில் 38 ரன்கள், இஷான் கிஷன் 55 பந்துகளுக்கு 45 ரன்களை அடித்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டான வாஷிங்டன் சுந்தர் அடுத்த இன்னிங்ஸில் 35 ரன்களை அடித்துள்ளார். இந்தியா ஏ கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக்அவுட்டாகி உள்ளார்.

India vs India A: சர்ஃபராஸ் கான் அதிரடி சதம்

அந்த வகையில், இரண்டாவது நாளில் 27 வயதான சர்பராஸ் கான் 76 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 101 ரன்களை அதிரடியாக அடித்துள்ளார். இருப்பினும், இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள சர்பராஸ் கான் தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை. இது ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் கடுமையான கேள்வியை எழுப்பியது. 

குறிப்பாக சர்பராஸ் கான் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார். அதிலும் அவர் 92 ரன்களை அடித்திருந்தார். சர்பராஸ் கான் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37.10 சராசரியில் 371 ரன்களை குவித்துள்ளார். கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 150 ரன்களை அவர் அடித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது. இவரை எடுத்திருந்தால் நிச்சயம் நம்பர் 5 அல்லது நம்பர் 6 இடத்தில் விளையாட வைத்திருக்கலாம். 

மேலும் படிக்க | WTC பட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்காவுக்கு எவ்வளவு கோடி பரிசு தெரியுமா?

மேலும் படிக்க | இனவெறி பிரச்னைகளை முறியடித்து சாம்பியனான South Africa - கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நாள்!

மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த டெம்பா பவுமா படை... WTC பட்டத்தை வென்றது தென்னாப்பிரிக்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News