India vs New Zealand 2026 schedule : டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு குட் நியூஸை கொடுத்திருக்கிறது பிசிசிஐ. இங்கிலாந்து தொடரில் இருக்கும் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஜனவரியில் நடக்கும் நியூசிலாந்து தொடர்
PTI அறிக்கையின்படி, இந்தியா ஜனவரி 2026ல் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இதன் போது, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடர் ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31 ஆம் தேதி முடிவடையும். முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 ஆம் தேதி வதோதராவில் நடைபெறும். அதே நேரத்தில், டி20 தொடரின் கடைசி போட்டி ஜனவரி 31 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும்.
வதோதராவில் உள்ள மூன்றாவது சர்வதேச மைதானம்
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு வதோதராவில் ஒரு சர்வதேச போட்டியில் விளையாடும். கடைசியாக 2010 ஆம் ஆண்டு இங்குள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில், தற்போதைய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சதம் அடித்து ஆட்ட நாயகன் ஆனார். விராட் கோலி 63 ரன்கள் எடுத்தார். இந்திய அணி வதோதராவில் உள்ள மோதி பாக் மைதானத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. 1988 ஆம் ஆண்டு முதல் இங்கு எந்த போட்டிகளும் நடத்தப்படவில்லை. இப்போது இந்திய அணி நகரத்தின் மூன்றாவது மைதானத்தில் விளையாடும். அதன் பெயர் கோடாம்பி மைதானம். இங்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டிசம்பர் 2024ல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
வங்காளதேசம்-ஆஸ்திரேலியா தொடர்
இந்த சுற்றுப்பயணத்தில் நடக்கும் ஒருநாள் போட்டியின் போது ரசிகர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை பார்க்க முடியும். அதேநேரத்தில் இந்த தொடருக்கு முன்பாகவே இந்திய அணி வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இருப்பினும், பிசிசிஐ இன்னும் அந்த போட்டிகளை இறுதி செய்யவில்லை. தற்போது, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்தில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 முதல் லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் நடைபெறுகிறது.
இந்தியா vs நியூசிலாந்து 2026 முழு அட்டவணை:
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள் போட்டி: ஜனவரி 11 - பரோடா
2வது ஒருநாள் போட்டி: ஜனவரி 14 - ராஜ்கோட்
3வது ஒருநாள் போட்டி: ஜனவரி 18 - இந்தூர்
டி20 சர்வதேச தொடர்
1வது டி20ப: ஜனவரி 21 - நாக்பூர்
2வது டி20ப: ஜனவரி 23 - ராஞ்சி
3வது டி20ப: ஜனவரி 25 - குவஹாத்தி
4வது டி20ப: ஜனவரி 28 - விசாகப்பட்டினம்
5வது டி20ப: ஜனவரி 31 - திருவனந்தபுரம்.
மேலும் படிக்க | WTC பட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்காவுக்கு எவ்வளவு கோடி பரிசு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ