இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டி அட்டவணை, நேரலை, பிளேயிங் லெவன் விவரம்

India vs New Zealand T20 Series 2026: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் டி20 போட்டித்தொடர் மற்றும் நேரலை, பிளேயிங் லெவன் குறித்த தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jan 19, 2026, 03:38 PM IST
  • இந்தியா - நியூசிலாந்து தொடர்
  • இரு அணிகளுக்கும் 21ம் தேதி முதல் போட்டி
  • பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்
இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டி அட்டவணை, நேரலை, பிளேயிங் லெவன் விவரம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, அடுத்ததாக டி20 தொடரில் விளையாட உள்ளது. 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் இத்தொடரில் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளன. இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் காணும் நிலையில் மிட்செல் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி களம் காண உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான பலப்பரீட்சை வரும் ஜனவரி 21-ம் தேதி தொடங்குகிறது.

Add Zee News as a Preferred Source

உலகக்கோப்பைக்கு முன் கடைசி வாய்ப்பு

பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கும் இந்திய அணிக்கு, இந்த நியூசிலாந்து தொடர் மிக முக்கியமானதாகும். வீரர்களின் ஃபார்மை பரிசோதிக்கவும், சரியான காம்பினேஷனை உறுதி செய்யவும் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு இதுவே கடைசி வாய்ப்பு.

இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவதால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் முதல் மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடுவார் எனத் தெரிகிறது. கடந்த டிசம்பர் 2023-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், சுமார் ஓராண்டுக்குப் பிறகு டி20 அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.

போட்டி எப்போது?

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டம் ஜனவரி 21, புதன்கிழமை நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 2-வது போட்டி ஜனவரி 23-ல் ராய்ப்பூரிலும், 3-வது போட்டி ஜனவரி 25-ல் கவுகாத்தியிலும் நடைபெறவுள்ளது. தொடரின் 4-வது ஆட்டம் ஜனவரி 28-ல் விசாகப்பட்டினத்திலும், இறுதி மற்றும் 5-வது டி20 போட்டி ஜனவரி 31-ல் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

நேரம் மற்றும் நேரலை விவரம்

அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும். இதற்கான டாஸ் மாலை 6:30 மணிக்கு போடப்படும். கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஆப் மூலமாகவும் நேரலையில் கண்டு மகிழலாம். தமிழ் ரசிகர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு உள்ளது.

இந்திய அணி விவரம்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் மற்றும் ரவி பிஷ்னோய்.

இந்தியா - நியூசிலாந்து இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய டி20 போட்டிகளில் இந்திய அணி 14 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இருந்தாலும், உலகக்கோப்பைக்கு முன்னதாக இரு அணிகளும் சமபலத்துடன் மோதும் என்பதால் இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தூக்கிவீசப்படுவாரா குல்தீப் யாதவ்... நம்பிக்கை இழந்த கில், கம்பீர் - வீடியோவால் பரபரப்பு

மேலும் படிக்க | விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News